அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன்:
சஞ்சு சாம்சன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். அந்த போட்டியில் 8வது வீரராக களம் இறங்கிய இவர் 24 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார்.
அதேபோல், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானர். அதில் மூன்றாவது வீரராக களம் கண்ட சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என மொத்தம் 46 ரன்களை எடுத்தார். அதேநேரம், இவர் இன்னும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் கூட விளையாடவில்லை.
கடைசியாக இந்த ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும், அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் இடம் பெற்றார். அதன் பிறகு ஆசிய கோப்பை 2023, உலகக் கோப்பை 2023, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடர் என்று எதிலும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடர்களில் மட்டுமே இடம் பெற்று விளையாடி வருகிறார்.
இதனிடையே, இதுவரை அவர் விளையாடிய 13 ஒருநாள் போட்டிகளில் 55.71 என்ற சராசரியில் 390 ரன்களை குவித்திருக்கிறார். அதேபோல், இந்திய அணிக்காக 24 டி 20 போட்டிகளில் விளையாடி 374ரன்கள் எடுத்துள்ளார்.
ராஜஸ்தான் கேப்டன்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கிறார். இந்த நிலையில் தான் இந்திய அணியில் இடம் பெறாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படு தன்னை மக்கள் அதிர்ஷ்டமில்லாதவன் என்று அழைக்கிறார்கள் என்று யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் வேதனைபட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ”இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எப்போதும் எனக்கு ஆதரவு அளித்துள்ளார். ஐபிஎல் தொடரின் போது நான் கேப்டனான பின் 2வது நபராக எனக்கு போன் செய்தவர் ரோகித் சர்மா தான். ஐபிஎல் தொடரில் எனது அறிமுகம் முதலே என்னை பாராட்டி வருகிறார். மும்பை அணிக்கு எதிராக அதிக சிக்சர் அடிக்கிறாய் என்று கிண்டல் செய்வார். எப்போது நட்புடன் பழகுபவர் ரோகித் சர்மா.
அதேபோல் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதால், என்னை பலரும் அதிர்ஷ்டம் இல்லாத வீரர் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது, இப்படியான இடத்தில் இருப்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்” சஞ்சு சாம்சான்.
சசி தரூர் கேள்வி:
இதனிடையே, இந்த நிலையில் சஞ்சு சாம்சனை அணியில் எடுக்காதது குறித்து ரசிகர் ஒருவர், அவரின் சாதனையை குறிப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை ஷேர் செய்து, அதற்கு பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர்" இது உண்மையிலேயே விவரிக்க முடியாதது. சஞ்சு சாம்சனை அணியில் மட்டும் எடுத்திருக்கக் கூடாது. இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்திருக்க வேண்டும்.
சூர்யகுமாரை விட கேரள அணிக்கு, ராஜஸ்தான் அணிக்கு அவர் கேப்டனாக பணியாற்றி அனுபவம் அதிகம். கிரிக்கெட்டை விரும்பும் மக்களுக்கு தேர்வுக்குழு இது குறித்தி விளக்கம் அளிப்பது அவசியம். மேலும், சாஹலை ஏன் தேர்வு செய்யவில்லை ? ” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சசி தரூர்.