வங்கதேச அணிக்கு எதிராக ஆஷா சோபனா தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் களம் இறங்கியுள்ளார்.


வங்கதேசம் - இந்தியா:


இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் இன்று (மே 6) 4 வது டி20 போட்டி சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.


முன்னதாக இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கை தொடங்கி விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் களம் இறங்கியதன் மூலம் தன்னுடைய 300வது சர்வதேச போட்டியில் களம் இறங்கிய 5வது மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனை படைத்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்.


300 வது போட்டியில் களம் கண்ட ஹர்மன்ப்ரீத் கவுர்:


கடந்த 1989 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த ஹர்மன்பீரீத் கவுர் இதுவரை 5 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் 8 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள இவர் 131 ரன்கள் எடுத்துள்ளார். பந்து வீச்சை பொறுத்தவரையில் 5 இன்னிங்ஸ்களில் 30 பந்துகள் வீசி 145 ரன்களை விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அதேபோல், 130 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் 111 இன்னிங்ஸ்கள் பேட்டிங் செய்து 3410 ரன்கள் எடுத்துள்ளார். 


இதில் 18 அரைசதம் மற்றும் 5 சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 171* ரன்கள் எடுத்திருக்கிறார். சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் பந்து வீச்சை பொறுத்தவரை 130 போட்டியில் 69 இன்னிங்ஸ்களில் பந்து வீசி இருக்கும் இவர் 1664 பந்துகளை வீசி 1457 ரன்களை விட்டுக்கொடுத்து 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  அதிகபட்சமாக 16 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டைகளை வீழ்த்தி இருக்கிறார்.


சர்வதேச டி20 போட்டிகளை பொறுத்தவரை 165 போட்டிகள் (இன்றைய போட்டியையும் சேர்த்து) 147 இன்னிங்களில் பேட்டிங் செய்து 3240 ரன்கள் குவித்துள்ளார். பந்து வீச்சை பொறுத்தவரை 62 இன்னிங்ஸ்களில் 760 பந்துகள் வீசி உள்ள இவர் 795 ரன்களை விட்டுக்கொடுத்து 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் தான் வங்கதேச அணிக்கு எதிராக தன்னுடைய 300வது சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார் ஹர்மன்ப்ரீத் கவுர்.  முன்னதாக 300 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ் 333 போட்டிகள், சுசிபேட்ஸ் 317 போட்டிகள், எல்லிஸ் பெர்ரி 314, சார்லோட் எட்வர்ட்ஸ் 309 போட்டிகள் விளையாடி இருக்கின்றன. தற்போது இந்த பட்டியலில் ஹர்மன்ப்ரீத் கவுரும் இணைந்துள்ளார்.


33 வயதில் அறிமுகமான ஆஷா சோபனா:


அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பெண்கள் ப்ரீமியர் லீக்கில் விளையாடி, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற ஆஷா சோபனா தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் களம் இறங்கியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 33 வயதில் இந்திய அணிக்காக இவர் அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: PBKS vs CSK Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..பஞ்சாப்பை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபரா வெற்றி!


மேலும் படிக்க: T20 World Cup 2024: வெஸ்ட் இண்டீஸுக்கு வந்த தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை.. நடைபெறுமா டி20 உலகக் கோப்பை..?