கொல்கத்தா - லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது பால் பாய் பிடித்த கேட்ச் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.


ஐ.பி.எல் சீசன் 17:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. இதில் பல்வேறு விதமான சாதனைகளை வீரர்கள் முறியடித்து வருகின்றனர். அதேபோல் இந்த ஐ.பி.எல் சீசனில் பல சுவாரஸ்ய சம்பவங்களும் நடைபெறுகிறது.


பால் பாய் பிடித்த கேட்ச்:


முன்னதாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 16.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இந்த போட்டியின் போது தான் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது. அதாவது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பேட்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் கொல்கத்தா வீரர் வைபவ் அரோரா வீசிய பந்தில் ஓங்கி அடிக்க அந்த பந்து சிக்ஸர்கருக்கு பறந்தது. அப்போது அங்கு பால் பாயக நின்று கொண்டிருந்த அதர்வா கே.குப்தா என்ற இளைஞர் லாவகமாக கேட்ச் பிடித்தார். வைபவ் அரோரா வீசிய மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த வீடியோவை இந்தியன் ப்ரீமிய லீக் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்ளில் வைரலாகி வருகிறது. 


 






வாழ்த்திய லக்னோ பீல்டிங் கோச்:


இந்நிலையில் பவுண்டரி லைனில் நின்று லாவகமாக கேட்ச் பிடித்த அதர்வா கே.குப்தா என்ற அந்த இளைஞரை லக்னோ அணியின் பீல்டிங் கோச் ஜான்டி ரோட்ஸ் பாராட்டியுள்ளார். அதேபோல் பீல்டிங் தொடர்பான அறிவுரைகளையும் அந்த இளைஞருக்கு வழங்கி இருக்கிறார் ரோட்ஸ். அதேபோல் தான் செய்த சிறந்த பீல்டிங் பற்றியும் பேசியுள்ளார். முன்னதாக கடந்த 1993 ஆம் ஆண்டி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சிறந்த பீல்டிங்கை வெளிப்படுத்தியதற்கு ஆட்ட நாயகன் விருதை பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஜான்டி ரோட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: IPL 2024 MI vs SRH: வான்கடேவின் ஹைதராபாத்தை வச்சு செய்யுமா மும்பை..? இன்று யாருக்கு வெற்றி..?


மேலும் படிக்க: T20 World Cup 2024: வெஸ்ட் இண்டீஸுக்கு வந்த தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை.. நடைபெறுமா டி20 உலகக் கோப்பை..?