வருகின்ற ஜூன் மாதம் தொடங்கும் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ள இடங்களில் பயங்கரவாத அமைப்புகள் தீவிரவாத தாக்குதல் நடத்த இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024 போட்டியானது வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நடத்துக்கின்றன. ஆனால், போட்டி தொடங்க இன்னும் 25 நாட்களுக்கு குறைவான நாள்களே உள்ள நிலையில், கரிபீயன் நாடுகளுக்கு தீவிரவாத தாக்குதல் மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சுறுத்தல் வடக்கு பாகிஸ்தானில் இருந்து வந்தது. என்னிலும், இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் தொடங்கியுள்ளது.
டி20 உலகக் கோப்பையின்போது கரீபியன் (வெஸ்ட் இண்டீஸ்) நாடுகளை குறிவைத்து தாக்குவோம் என்று வடக்கு பாகிஸ்தானில் இருக்கும் ஐஎஸ்- கொராசனியம் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், 2024 டி20 உலகக் கோப்பை உட்பட உலகின் முக்கிய நிகழ்வுகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் உண்மையா..?
இதுகுறித்து டிரினிடாட் எக்ஸ்பிரஸின் கூற்றுப்படி, ”ஐஎஸ் அமைப்பின் ஊடகக் குழுவான ‘நஷீர் பாகிஸ்தானிடம்’ இருந்து இந்த உளவுத் தகவல்கள் கிடைத்தது” என தெரிவித்துள்ளது. 'நஷீர் பாகிஸ்தான்' என்பது ஐ.எஸ் உடன் தொடர்புடைய ஒரு பிரச்சார சேனல் ஆகும்.
இந்த தீவிரமான பிரச்சினை குறித்து கிரிக்பஸ் உடன் பேசிய கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஜானி கிரேவ்ஸ், “ டி20 உலகக் கோப்பை நடத்துவது குறித்து நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். உலகக் கோப்பையில் பங்கேற்கும் வீரர்களின் பாதுகாப்பு முக்கியம். எனவே போட்டி நடைபெறும் நகரங்களில் உள்ள அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உறுதி செய்துள்ளோம். மேலும், உலக நடைமுறைகளையும் தொடர்ந்து கண்காணித்து என்ன நடக்கிறது என்பதை கவனித்துகொண்டே இருப்போம்” என்றார்.
டி20 உலகக் கோப்பையில் முதல்முறையாக 20 அணிகள் பங்கேற்பு:
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 20 அணிகளுடன் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். எனவே, கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய டி20 உலகக் கோப்பை இதுவாக பார்க்கப்படுகிறது. இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக நடந்து வருகிறது. 20 அணிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குழுக்கள் மோதவுள்ள நிலையில், இறுதிப்போட்டியையும் சேர்த்து மொத்தமாக 26 போட்டிகள் நடைபெறவுள்ளது.
பங்கேற்கும் நாடுகளின் விவரம்:
ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024: குழுக்கள்
குழு ஏ: இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா.
குரூப் பி: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் ஓமன்.
குழு சி: நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா மற்றும் பப்புவா நியூ கினியா.
குழு டி: தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் நேபாளம்.