இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் 2007 மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தார். இவர் அண்மையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் தற்போது மாநிலங்களவை எம்பியாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். 


இந்நிலையில் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் தோனி அவருக்கு கூறிய அறிவுரை தொடர்பாக ஹர்பஜன் மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செனலில் வரும் ‘தில் சே’ நிகழ்ச்சியில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் எப்போதும் மிகவும் கடினமான ஒன்று தான். அந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் ஆடி 260 ரன்கள் எடுத்து. 


இதைத் தொடர்ந்து நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக தொடங்கினோம். முதலில் 4 விக்கெட்டை எடுத்தோம். அதன்பின்னர் மிஸ்பா உல் ஹக் மற்றும் கம்ரான் அக்மல் ஆகிய இருவரும் சிறப்பாக ஜோடி சேர்ந்து ரன்களை சேர்த்து வந்தனர். அந்தப் போட்டியில் நான் முதலில் 5 ஓவர்கள் வீசியிருந்தேன். அதில் விக்கெட் எடுக்காமல் 27 ரன்கள் வரை கொடுத்திருந்தேன். 






அந்த சமயத்தில் ஒரு தண்ணீர் இடைவேளை வந்தது. அப்போது என்னிடம் வந்து தோனி ஒரு அறிவுரை கூறினார். அதாவது நீங்கள் ஸ்டெம்பிற்கு வலது பக்கமாக (around the wicket)ல் இருந்து பந்துவீசுங்கள் என்று கூறினார். அதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 33வது ஓவரை நான் வீசினேன். அந்த ஓவரின் முதல் பந்தில் நான் கம்ரான் அக்மல் விக்கெட்டை எடுத்தேன். அதன்பின்னர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் அஃப்ரிதியின் விக்கெட்டையும் எடுத்தேன். கம்ரான் அக்மலின் அந்த விக்கெட் மிகப்பெரிய திருப்பு முணையாக அமைந்தது. அந்த விக்கெட்டை எடுக்க தோனியின் அறிவுரை மிகவும் உதவியானதாக அமைந்தது” எனத் தெரிவித்திருந்தார். 


2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 85 ரன்கள் எடுத்திருந்தார். கடைசியாக சுரேஷ் ரெய்னா அதிரடி காட்டினார். பாகிஸ்தான் அணிக்கு 261 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 231 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அத்துடன் இந்திய அணி அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியிருந்தது. வழக்கமாக இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளில் காணப்படும் ஆர்வம் இந்தப் போட்டியிலும் இருந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற தோனியின் அறிவுரை முக்கிய காரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க:75-வது சுதந்திர தினம்: வாழ்த்துகள், புகைப்படங்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இங்கே..!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண