இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல நட்சத்திரம் புஜாரா. டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்ட புஜாரா, தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ராயல் லண்டன் கிரிக்கெட் போட்டியில் புஜாரா அதிரடிக்கு மேல் அதிரடி என ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார்.




கடந்த போட்டியில் அதிரடி சதம் அடித்து அசத்திய புஜாரா, இன்று சர்ரே அணிக்கு எதிராக மீண்டும் ருத்ரதாண்டவ இன்னிங்சை ஆடியுள்ளார். அதாவது, சஸ்செக்ஸ் அணிக்காக இன்று புஜாரா கேப்டனாக களமிறங்கினார். முதலில் பேட் செய்த சஸ்செக்ஸ் அணிக்கு தொடக்க வீரராக ஹாரிசன் 5 ரன்களிலும், அலி 4 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்து டாம் கிளார்க்கும், கேப்டன் புஜாராவும் ஜோடி சேர்ந்தனர்.


 






இதுவரை இந்திய அணி பார்த்திராத புஜாரா பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினார். அவருக்கு டாம் கிளார்க்கும் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் இணைந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து அசத்தினர். அணியின் ஸ்கோர் 214 ரன்களை எட்டியபோது சிறப்பாக ஆடி வந்த டாம் கிளார்க் 106 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 104 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.


அடுத்து வந்த அல்சோப், ராவ்லின்ஸ் ஆகியோரும் புஜாராவிற்கு ஒத்துழைப்பு அளித்தனர். ஆனாலும், புஜாரா களத்தில் நங்கூரமிட்டு எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவரது அதிரடியான பேட்டிங்கால் சஸ்செக்ஸ் அணியின் ரன்ரேட் மின்னல் வேகத்தில் எகிறியது. அதிரடியாக ஆடிய புஜாரா சதத்தை கடந்த பிறகும் தொடர்ந்து அசத்தினார். அவரது அதிரடியால் சஸ்செக்ஸ் அணி 44வது ஓவரிலே 300 ரன்களை கடந்தது.




அணியின் ஸ்கோர் 350 ரன்களை எட்டியபோது புஜாராவின் ருத்ரதாண்டவம் முடிவுக்கு வந்தது. அவர் 131 பந்துகளில் 20 பந்துகளில் 5 பவுண்டரி 174 ரன்களுடன் அவுட்டானார். புஜாராவின் அதிரடியால் சஸ்செக்ஸ் அணி 50 ஓவர்களில் 378 ரன்களை விளாசியது. டெஸ்ட் வீரராக மட்டுமே அறியப்பட்ட புஜாரா, ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டபோது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 


ஆனால், அவரை அவ்வாறு விமர்சித்தவர்களுக்கும், கிண்டல் செய்தவர்களுக்கும் பதிலடி தரும் விதமாக புஜாரா மிரட்டலான சதங்களை அடுத்தடுத்து விளாசி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Dhoni: வெளிநாட்டு டி20 தொடர்களில் தோனி அங்கம் வகிக்க வேண்டுமென்றால் இதை செய்ய வேண்டும்.. அது என்ன?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண