விராட் கோலி:


இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன், ரசிகர்களால் ரன் மிஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி பிறந்த மாதம் நவம்பர்தான். அதன்படி, நவம்பர் 05 ஆம் தேதி 1988 ஆம் ஆண்டு டெல்லியில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பிரேம் கோலி ஒரு  குற்றவியல் வழக்கறிஞர்.  


இவரது தாய்  சரோஜ் கோலி இல்லத்தரசி. உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். அண்ணன் விகாஸ் மற்றும் அக்கா பாவனா.
 
இந்திய அணிக்காக இதுவரை 111 டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ளார். அதில், 8676 ரன்கள் எடுத்துள்ளார்.  இதில் 29 சதங்கள், 29 அரை சதங்கள் அடங்கும். அதேபோல், 287 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில், 13437 ரன்கள் குவித்துள்ளார்.  இதில் 48 சதங்கள், 69 சதங்கள் அடங்கும்.  


மேலும், 115 டி20 போட்டிகள் விளையாடி உள்ளார். இதில் 4008 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம், 37 அரைசதங்கள் அடங்கும்.


விவிஎஸ் லட்சுமணன்:


இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான விவிஎஸ் லட்சுமணன் கடந்த 1974 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பிறந்தார். ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்த இவர், இந்திய அணிக்காக 134 டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ளார்.


இதில் 17 சதங்கள் மற்றும் 56 அரைசதங்கள் உட்பட மொத்தம் 8781 ரன்கள் எடுத்துள்ளார்.


அதேபோல், 86 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள விவிஎஸ் லட்சுமணன் 2338 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 6 சதங்கள் மற்றும் 10 அரைசதம் அடங்கும்.


25 டி20 போட்டிகளில் விளையாடி 3 அரைசதம் உட்பட 491 ரன்கள் எடுத்துள்ளார்.


சுரேஷ்  ரெய்னா:


சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் சின்ன தல என்று அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா நவம்பர் 27 ஆம் தேதி, 1986 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பிறந்தார். இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இவர்  1 சதம் 7 அரைசதம் உட்பட மொத்தம் 768 ரன்கள் எடுத்துள்ளார். 226 ஒருநாள் போட்டிகளில் 5 சதங்கள் 36 அரைசதங்களுடன் மொத்தம் 5615 ரன்கள் அடித்துள்ளார்.


இந்திய அணிக்காக 78 டி20 போட்டிகள் விளையாடி 1605 ரன்கள் எடுத்து இருக்கும் இவர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்தார்.


பிரித்வி ஷா:


இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா நவம்பர் 9 ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு பிறந்தார். மகாராஷ்ட்ரா மாநிலம் தானேவில் பிறந்த இவர், இந்திய அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகளும் 6 ஒரு நாள் போட்டிகளிலும், 1 டி20 போட்டியிலும் விளையாடி உள்ளார்.


சஞ்சு சாம்சன்:


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி பிறந்தவர் சஞ்சு சாம்சன். இந்திய அணிக்காக இதுவரை 13 ஒருநாள் போட்டிகளும், 24 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். 


மேலும் படிக்க: Mohammed Shami: பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் ஆயுதம்! இந்திய அணியின் எல்லைச்சாமியான முகமது ஷமி!


மேலும் படிக்க: World Cup Points Table: மீண்டும் உச்சம் தொட்ட இந்திய அணி.. இங்கிலாந்து தொடர்ந்து 10வது இடம்.. புள்ளிப்பட்டியல் நிலை இதுதான்..!