உலகக் கோப்பை 2023ல் நேற்றைய போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதன்மூலம், இங்கிலாந்து அணியின் உலகக் கோப்பை பயணம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு ஆறாவது வெற்றியுடன் இந்தியா 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம், தென்னாப்பிரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது.
கிட்டத்தட்ட நடையை கட்டிய இங்கிலாந்து அணி:
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி 6 போட்டிகளில் விளையாடி வெறும் 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. அதிர்ச்சியளிக்கும் வகையில் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி கடைசி அதாவது பத்தாவது இடத்தில் உள்ளது. இந்த அணி 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்த நிலையில், 1 வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி 6 போட்டிகளில் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து, நியூசிலாந்து அணி 6 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, போட்டிகளில் 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
புள்ளி பட்டியலில் மற்ற அணிகள் எங்கே?
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று ஆசிய அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் 5, 6 மற்றும் 7வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து, நெதர்லாந்து அணி புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து 6 போட்டிகளில் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து தலா 2 புள்ளிகளுடன் சமமாக இருந்த போதும், ஷகிப் அல் ஹசனின் அணி சிறந்த நிகர ஓட்ட விகிதத்தைக் கொண்டுள்ளது. எனவே அது ஒன்பதாவது இடத்தில் உள்ளது. எனவே, இங்கிலாந்து அணி பத்தாவது இடத்தில் உள்ளது.
சாம்பியன் டிராபியில் இல்லாமல் போன இங்கிலாந்து அணி:
கடந்த 2021 நவம்பர் மாதம் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற ஐசிசி நிர்ணயித்த விதிகளின்படி, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து போன்ற அணிகள் நடப்பு உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை. இதன் காரணமாக சாம்பியன் டிராபி போட்டியில் இந்த அணிகள் பங்கேற்க முடியாது.
கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் தற்போது டாப்-8 பட்டியலில் இல்லை. இந்த அணிகள் அனைத்தும் உலகக் கோப்பையில் 5 மற்றும் 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இங்கிலாந்து 10வது இடத்திலும், வங்கதேசம் 9வது இடத்திலும் உள்ளன. உலகக் கோப்பை முடியும் வரை இதே நிலை நீடித்தால், இந்த இரு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட முடியாமல் போகும். உலகக் கோப்பை 2023யில் குரூப் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த பிறகு முதல் ஏழு இடங்களைப் பிடித்து சாம்பியன்ஸ் டிராபிக்கு எந்த அணிகள் தகுதி பெறும் என்பதுதான் நிலை.
ஏனெனில் இங்கிலாந்து அணி கடந்த 2019ல் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையையும், கடந்த 202ல் நடந்த டி20 உலகக் கோப்பையையும் வென்றது குறிப்பிடத்தக்கது. வருகின்ற 2025ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன் டிராபிக்கு இங்கிலாந்து அணி தகுதிபெறாமல் போனால் இது மிகப்பெரிய அவமானமாக இருக்கும்.