டி 20:


இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (டிசம்பர் 14) நடைபெற்றது.  இந்தப் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


 இதன்மூலம்,  இந்திய அணி டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.  இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.


 சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.  அவருக்கு முன்னதாக புவனேஷ்குமார் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் இருமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


முன்னதாக, இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும்  விளையாட உள்ளது. இதில், ஒரு நாள் போட்டிகளை கே.எல்.ராகுலும், டெஸ்ட் போட்டிகளை ரோஹித் சர்மாவும் வழிநடத்த உள்ளனர்.


இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் தனக்காக எல்லா சூழல்களிலும் ஆதரவாக இருந்ததாக கூறியுள்ளார். 


எனக்காக ஆதரவாக இருந்தார்..


இது தொடர்பாக பேசியுள்ள குல்தீப் யாதவ், “ சாஹல் பாய் ஒரு நீண்ட விமானப்பயணத்தில் இருந்ததால் என்னால் அவருடன் அதிக நேரம் பேச முடியவில்லை. நேற்று மாலை  நான் அவரை சந்தித்தேன்.


அப்போது அவர் என்னிடம் பந்து வீச்சின் ஸ்டைலை மாற்றதே என்று கூறினார். 2 -3 ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், சாஹல் பாய் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தார்.  நாங்கள் இருவரும் ஒரு நாள் போட்டிகளில் ஒன்றாக விளையாடினால் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், “இந்த நாள் எனக்கு மிகவும் சிறப்பான நாளாக அமைந்துள்ளது. நான் 5 விக்கெட்டுகள் எடுப்பேன் என்று நினைத்ததே இல்லை. அணியின் வெற்றிதான் எனக்கு மிகவும் முக்கியம். நான் சிறிது கால இடைவெளிக்குப் பிறகு விளையாடுவதால் எனது பந்துவீச்சு குறித்து கவனமாக இருந்தேன்.


இந்த நாள் எனக்கு மிகச் சரியான நாளாக அமைந்துள்ளது. நன்றாக பந்துவீச முடிந்தது. ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கும் பொருத்தமானதாகவே இருந்தது” என்று கூறினார். 


மேலும் படிக்க: MS Dhoni: சச்சினுக்கு அடுத்து தோனிக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்: பிசிசிஐயின் அதிரடி முடிவு


மேலும் படிக்க: Gautam Gambhir: டி20 தொடரில் ரவி பிஷ்னோய் புறக்கணிப்பு... ’அத மட்டும் பண்ணிடாதீங்க...’ பிசிசிஐ மீது கம்பீர் காட்டம்!