இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இச்சூழலில், 2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. 


இந்த சீசனுக்கு முன்னதாக தற்போது அந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள், வெளியேற்றப்பட்ட வீரர்கள் மற்றும் டிரேடிங் செய்யப்பட்ட வீரர்கள் என அனைத்து வகையான பட்டியலையும் வெளியிட்டு விட்டன. இதன் காரணமாக எதிர்வரும் டிசம்பர் 19-ஆம் தேதி அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் வீரர்களின் மினி ஏலமானது நடைபெற உள்ளது. 


மும்பை அணியின் கேப்டனான ஹர்திக்:


இச்சூழலில், மும்பை இந்தியன்ஸ் அணி, இதற்கு முன்னதாக தங்கள் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை அப்பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது. அதன்படி, அந்த அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நியமித்துள்ளது.


இந்நிலையில், மும்பை அணியின் பயிற்சியாளர் (Global Head of Performance) மகிளா ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,


” இது மும்பை இந்தியன்ஸ் அணியின் கட்டமைப்பின் ஒரு பகுதி. மேலும், மும்பை அணியின் எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் தத்துவத்தின் அம்சம். 


மிகச்சிறந்த கேப்டன்:


மும்பை இந்தியன்ஸ் அணி சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஹர்பஜன் சிங் மற்றும் ரோகித் சர்மா வரை வெற்றிகளில் பங்காற்றிய வலுவான கேப்டன்களை கொண்ட அணி, இது வருங்காலத்தை உருவாக்க உதவும். 


அந்த வரிசையில் ஐபிஎல் 2024 சீசனுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்கிறார். அதே சமயம் ரோஹித் சர்மாவின் தலைமைக்கு நாங்கள் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


2013 ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக தன்னுடைய திறமையை நன்றாக செயல்படுத்தியிருக்கிறார். எங்கள் அணிக்கு மகத்தான  வெற்றிகளை தந்தது மட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக அவர் தன்னை உறுதிப்படுத்தியுள்ளார்” என்றார் ஜெயவர்த்தனே. 


இதனிடையே, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களால் ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதை ஏற்றக்கொள்ள முடியவில்லை. இதனால், மும்பை அணிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.


மேலும் படிக்க: Gautam Gambhir: டி20 தொடரில் ரவி பிஷ்னோய் புறக்கணிப்பு... ’அத மட்டும் பண்ணிடாதீங்க...’ பிசிசிஐ மீது கம்பீர் காட்டம்!


மேலும் படிக்க: MS Dhoni Case: எம்.எஸ்.தோனி தொடர்ந்த வழக்கு.. ஐ.பி.எஸ் அதிகாரிக்கு சிறை.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!