இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளும் மோதிய டி20 தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று ஹோவ் மைதானத்தில் தொடங்குகிறது.




ஹோவ் நகரத்தில் உள்ள கவுன்டி கிரவுண்ட் மைதானத்தில் இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா ஆகியோர் பேட்டிங்கில் கலக்க வேண்டியது அவசியம் ஆகும். விக்கெட் கீப்பர் யஸ்திகா பாட்டியா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.






இந்திய அணியின் பந்துவீச்சில் அனுபவமிகுந்த ஜூலன் கோஸ்வாமி இருப்பது பலமாகும். பூஜா வஸ்த்ரகர், ரேணுகாசிங், ராஜேஸ்வரி கெய்க்வாட் இங்கிலாந்திற்கு சவால் அளிக்கும் விதத்தில் பந்துவீச வேண்டியது அவசியம்.




கடந்த டி20 போட்டியில் இந்திய அணியின் ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா, ஷபினேனி மேக்னா, கேப்டன் ஹர்மன்பிரித் கவுர், ஹேமலதா ஆகியோர் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரிச்சா கோஷ், பூஜா வத்சகர், தீப்தி ஷர்மா ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களை எடுத்தனர்.






மற்ற வீராங்கனைகள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், இன்றைய போட்டியில் அவர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இங்கிலாந்து அணி கேப்டன் எமி ஜோன்ஸ் தலைமையில் களமிறங்குகின்றனர். டேனியல் வ்யாட், சோபியா டங்க்லே, பவுசியர், ஆலிஸ் கேப்சி, டாமி பிமோன்ட், ப்ரேயா கெம்ப், சோபி எக்லெஸ்டன், கேட் கிராஸ், லாரன் பெல், சார்லோட் டீன், இசி வாங், ஆலீஸ் டேவிட்சன், ரிச்சர்ட்ஸ், ப்ரெயா டேவீஸ், எம்மா லேம்ப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  


இந்திய அணி இந்த தொடரில் வெற்றியுடன் தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.


மேலும் படிக்க : Gautam Gambhir: தினேஷ் கார்த்திக்கா..? ரிஷப் பண்ட்டா? உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கம்பீரின் தேர்வு யார்..?


மேலும் படிக்க : Mohammad Shami : இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு கொரோனா...! ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகல்..!