மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான இஷான் கிஷன் ஆங்கில திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனமான டி.சி.யின் மிகவும் முக்கியமான கதாப்பாத்திரமும், உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட சூப்பர் மேன் லுக்கில் ஹோட்டலில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி வருகின்றது.
ஐபிஎல் தொடரினால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பல வீரர்கள் விளையாடியுள்ளனர். அதில் மிகவும் முக்கியமான வீரர்கள் வரிசையில் கட்டாயம் இஷான் கிஷனுக்கு இடம் உள்ளது. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார். இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி மேற்கிந்திய தீவுகளிடம் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
இஷான் கிஷன் மற்றும் ஐபிஎல்
கடந்த மற்றும் 2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்களில் குஜராத் லைன்ஸ் அணிக்காக விளையாடிய இஷான் கிஷனை மும்பை இந்தியன்ஸ் அணி 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் எடுத்தது. அன்றிலிருந்து இதுவரை இஷான் கிஷன் மும்பை அணிக்காக விளையாடி வருகின்றார்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை அணிக்காக விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன். இஷான் கிஷன் 1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி பிறந்தார்; . இஷான் கிஷன் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போலவே இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக இருப்பதுடன் தொடக்க ஆட்டக்காரராகவும் உள்ளார். இவர் இடது கை பேட்ஸ்மேன். அவர் 2016 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமானார். இஷான் கிஷன் தனது ஐபிஎல் வாழ்க்கையில் இன்றுவரை 94 போட்டிகளில் விளையாடி 28.95 சராசரியுடன் 2,374 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 15 அரை சதங்களையும் விளாசியுள்ளார் இஷான்.
இஷான் கிஷனின் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் 99 ரன்கள், இதனை கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இஷான் கிஷன் ஐபிஎல்-இல் மட்டும் 224 பவுண்டரிகள் மற்றும் 108 சிக்ஸர்களை அடித்துள்ளார். இஷான் கிஷன் தனது கடைசி ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் மும்பை, வான்கடே ஸ்டேடியத்தில் விளையாடினார், 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்.