இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் அது மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.


தீவிர பயிற்சியில் ஹர்திக் பாண்டியா:


இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம் ஏற்படும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இதனால் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடு வரும் கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் விளையாடினார். இதனிடையே தற்போது ரெட் பாலில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.


மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும்:


இதனால் ரஞ்சி கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வேளை ரஞ்சி கோப்பையில் ஹர்திக் பாண்டியா விளையாடினார் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இவரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கம்பீரின் விருப்பமாக இருக்கும் என்று தெரிகிறது. இச்சூழலில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஹர்திக் பாண்டியா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் அது மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் பேசுகையில், ஹர்திக் பாண்டியா மட்டும் ரெட் பால் கிரிக்கெட்டை மீண்டும் விளையாடினால், அது மிகச்சிறந்த விஷயமாக இருக்கும். ஏனென்றால் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் என்று இரு ரோல்களையும் ஒரே வீரர் செய்யும் போது, ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும். ஆனால் ஒரு உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ஹர்திக் பாண்டியா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் வந்தால், ஆச்சரியம் கொள்வேன்.


ஹர்திக் பாண்டியாவின் உடல் குறித்து நன்றாக அறிவேன். அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவது எளிதாக விஷயமாக இருக்காது. ஒருவேளை அது மட்டும் நடந்தால், நிச்சயம் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும்" என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.


மேலும் படிக்க: IND vs BAN 2nd Test:"எனக்கு வயிற்றுவலி"இந்தியா - வங்கதேச டெஸ்டில் அலறித் துடித்த ரசிகர்! கடைசியில் ட்விஸ்ட்


மேலும் படிக்க: Indian Hockey Team: அவரோட செல்ஃபி எடுத்தாங்க..ஆனா எங்கள புறக்கணிச்சிட்டாங்க! ஹாக்கி வீரர் ஹர்திக் சிங் ஷாக்