இந்திய கிரிக்கெட் அணிக்கு இளம் ரத்தங்களை பாய்ச்ச வேண்டிய அவசியமும், நேரமும் உருவாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய டி20 உலகக்கோப்பையை கேப்டன் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது.


டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு கேப்டன் ரோகித்சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கோலி, ரோகித் இடத்தை நிரப்பப்போவது யார்?


இந்த சூழலில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் இருவரும் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு இணையாக, அவர்களது இடத்திற்கு புதிய வீரர்களை உருவாக்க வேண்டியது அவசியம் ஆகும்.


இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஆர்.சி.பி. அணியின் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் கூறியிருப்பதாவது, “ முதலில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் ஆகும். ஆனால், அணியில் நான்கு வீரர்களுக்கு அவர்களது இடத்தை நிரப்புவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு.


ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, திலக் வர்மா மற்றும் சுப்மன்கில் ஆகியோர்தான் அந்த நான்கு பேர். இந்திய டி20 அணியில் என்னைப் பொறுத்தவரை ஜெய்ஸ்வால் கண்டிப்பாக தொடக்க வீரராக இறங்க வேண்டும்”


இவ்வாறு அவர் கூறினார்.


அசத்துவார்களா இளம் வீரர்கள்?


இந்திய அணியைப் பொறுத்தவரையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடத்தை நிரப்புவது மிக மிக கடினம் ஆகும். நீண்ட அனுபவமும், பல அரிய சாதனைகளை படைத்த இவர்களது இடங்களை நிரப்புவதும், பல நெருக்கடியான தருணங்களில் ஆட்டத்தை மாற்றிய வல்லமையும் இவர்களுக்கு உண்டு. இந்திய அணியின் தற்போதைய சூழலைப் பொறுத்தவரை, ஏராளமான இளம் வீரர்களுக்கு மத்தியில் இந்திய அணியில் இடம்பிடிக்க போட்டி நடைபெற்று வருகிறது.


அவர்களில் முக்கியமானவர்களாக தினேஷ் கார்த்திக் குறிப்பிட்ட ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன்கில் முக்கியமானவர்கள் ஆவார்கள். இவர்கள் இந்திய அணியின் எதிர்காலமாக கருதப்படுகிறார்கள். நடைபெற உள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இனி வரும் காலங்களில் இவர்களது ஆட்டத்திறன் மூலமாக ரோகித் மற்றும் விராட் கோலி இடத்தை நிரப்புவது யார்? என்பது தீர்மானிக்கும்.


மேலும் படிக்க: Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சிக்கு ”நோ” - வீரர்கள் பிசிசிஐ-யிடம் சொன்னது என்ன? ரோஹித்தின் தாக்கம்


மேலும் படிக்க: Formula 4 Car Race: அட்ரா சக்க..! சென்னையில் ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் - ரசிகர்கள் மகிழ்ச்சி