இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் டெஸ்ட் போட்டி நிறைவு பெற்ற பிறகு இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் பங்கேற்று ஆட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக, இந்திய அணி டெர்பிஷையர் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் இன்று ஆடியது.


இந்த போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக முதன்முறையாக தினேஷ் கார்த்திக் பொறுப்பேற்றார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. டெர்பிஷையர் அணியின் தொடக்க வீரர்கள் மசூத் 8 ரன்களிலும், ரீஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க மேட்சன் 28 ரன்கள் விளாசினார். கார்ட்ரைட், ப்ரூக் கெஸ்ட் மற்றும் அலெக்ஸ் ஹூயூக்ஸ் கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடியதால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்தது.




இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இறங்கியது. அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20யில் அசத்திய சஞ்சு சாம்சனும், ருதுராஜ் கெய்க்வாட்டும் தொடக்க வீரர்களாக இறங்கினர், தொடர்ந்து சொதப்பி வரும் ருதுராஜ் இந்த போட்டியிலும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த தீபக்ஹூடா, சஞ்சு சாம்சன் ஜோடி அசத்தலாக ஆடியது.


குறிப்பாக, தீபக் ஹூடா விறுவிறுவென்று ரன்களை விளாசினார். சஞ்சு சாம்சன் 30 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 38 ரன்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர், களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் அதிரடியாக ஆடினார். வெற்றியின் அருகே இந்திய அணி நெருங்கியபோது சிறப்பாக ஆடிய தீபக் ஹூடா 37 பந்தில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 16.4 ஓவர்களில் 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.




சூர்யகுமார் யாதவ் 22 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 36 ரன்களுடனும், கேப்டன் தினேஷ்கார்த்திக் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய தினேஷ்கார்த்திக், தன்னுடைய முதல் கேப்டன்ஷிப்பிலே அணிக்கு வெற்றியைத் தேடித்தந்ததற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கும், நார்தாம்டன்ஷையருக்கும் இடையேயான இரண்டாவது டி20 பயிற்சி போட்டி நாளை நடைபெற உள்ளது.


இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ முதல் டி20 போட்டி வரும் 7-ந் தேதி சவுதாம்படனில் நடைபெற உள்ளது. மொத்தம் 3 டி20 போட்டிகள் நடைபெற உள்ளது.


இதையும் படிங்க: ENG vs IND: தொடர்ந்து ஷார்ட் பந்தில் அடிசறுக்கும் ஷ்ரேயாஸ் ஐயர்... சமூக வலைத்தளங்களில் வெளுக்கும் நெட்டிசன்கள்..!


மேலும் படிக்க : Watch video : வளர்த்த கன்று கொடுத்த பெருமிதம்... பண்ட் சதமடிக்க, துள்ளிக்குதித்து மகிழ்ச்சியடைந்த ராகுல் டிராவிட்!



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண