இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடி வரும் இந்திய அணி ரிஷப்பண்ட் அபார ஆட்டத்தால் 250 ரன்களை கடந்துள்ளது. டாஸ் வென்ற பென்ஸ்டோக்ஸ் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். சுப்மன்கில் 17 ரன்களிலும், புஜாரா 13 ரன்களிலும் ஆட்டமிழக்க, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் கேப்டன் விராட்கோலி 11 ரன்களிலும், ஹனுமா விஹாரி 20 ரன்களிலும், இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் 15 ரன்களிலும் அவுட்டாகினார்.
ஷ்ரேயாஸ் ஐயர் ஷார்ட் பால் சாபம் :
இந்திய பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதல் வெளிநாட்டு டெஸ்ட் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கி 10 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் 15 ரன்களை விளாசினார். அதன்பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் மேட்டி பாட்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தங்கள் தாக்குதலை இந்திய அணிக்கு எதிராக தொடுக்க தொடங்கினார். ஷார்ட் பிட்ச் பந்துகளாக மாற்றி இந்திய வீரர்களை கதிகலங்க செய்ய முயற்சி செய்தனர்.
26வது ஓவரின் போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ஷ்ரேயாஸ் ஐயர், ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசி ஷார்ட் பந்தை அதை அடிக்கலாமா..? வேண்டாமா..? என்ற மனநிலையுடன் விளையாடி விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்கிஸிடம் அவுட்டானார்.
பிரண்டன் மெக்கல்லம் KKR இல் ஷ்ரேயாஸ் ஐயரின் பயிற்சியாளராக
ஷ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டுக்குப் பிறகு, பால்கனியில் அமர்ந்திருந்த பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலத்தைப் பார்த்து ஜோ ரூட் சிரித்தார். ஐபிஎல் 2022 இல் ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து பணியாற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் அவரது பலவீனம் குறித்து தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே ஜோ ரூட் சிரித்தார் என்று கூறப்படுகிறது.
ஷார்ட்-பந்திற்கு எதிராக ஐயரின் பலவீனத்தை இங்கிலாந்து அணி கச்சிதமாக செய்து வெற்றிகரமாக அவரை அவுட் செய்தது. இதையடுத்து, ட்விட்டரில் ரசிகர்கள் ஷ்ரேயாஸ் ஐயர் பலவீனம் குறித்து கலாய்த்தும், கருத்து தெரிவித்தும் வருகின்றனர். அந்த மீம்ஸ்கள் பின்வருமாறு :
முன்னதாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ஷ்ரேயாஸ் ஐயர் ஷார்ட் பந்தில் திணறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்