இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடி வரும் இந்திய அணி ரிஷப்பண்ட் அபார ஆட்டத்தால் 250 ரன்களை கடந்துள்ளது. டாஸ் வென்ற பென்ஸ்டோக்ஸ் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். சுப்மன்கில் 17 ரன்களிலும், புஜாரா 13 ரன்களிலும் ஆட்டமிழக்க, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் கேப்டன் விராட்கோலி 11 ரன்களிலும், ஹனுமா விஹாரி 20 ரன்களிலும், இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 15 ரன்களிலும் அவுட்டாகினார்.


98 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 150 ரன்களை கடக்குமா? என்ற பரிதாப நிலை ஏற்பட்டது. அப்போது, ஜோடி சேர்ந்த ரிஷப்பண்ட் மற்றும் ஜடேஜா ஜோடி ஆட்டத்தையே மாற்றியது. ஜடேஜா நிதானமாக ஆட துணை கேப்டன் ரிஷப்பண்ட் அதிரடியாக ஆடினர். அவரது அதிரடியால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது. சிறப்பாக ஆடிய ரிஷப்பண்ட் 52 பந்துகளில் அரைசதம் விளாசினார்.


அரைசதத்திற்கு பிறகு ரிஷப்பண்ட் வேகம் குறையவில்லை. அவருக்கு மறுமுனையில் ஜடேஜா நல்ல ஒத்துழைப்பு அளித்தார். ரிஷப்பண்ட் பவுண்டரியாக விளாசினார். இருவரின் அதிரடியாலும் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிய ரிஷப்பண்ட் 89 பந்துகளில் 15 பவுண்டரி 1 சிக்ஸருடன் 100 ரன்களை கடந்து அசத்தினார். 






இந்தநிலையில், ரிஷப்பண்ட் 89 பந்துகளில் சதமடித்தபோது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் துள்ளி குதித்து மகிழ்ச்சியடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராகுல் டிராவிட்டை தொடர்ந்து இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால், விராட் கோலி, சிராஜ் ஆகியோரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 






தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், 111 பந்துகளில் 146 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய ஜடேஜா அரைசதம் கடந்தார்.இறுதியாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண