DC-W vs UPW-W Live: 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி..! தாலியா மெஹ்ராத மட்டும் 90 ரன்கள் குவிப்பு..!
DC-W vs UPW-W Live: மகளிர் பிரிமியர் லீக்கில் இன்று உ.பி. வாரியர்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேடுகளை ஏபிபி நாடு பக்கத்தில் காண இணைந்து இருங்கள்.
36 பந்தில் 6 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசி 53 ரன்களை விளாசி அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடிவருகிறார்.
36 பந்தில் 6 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசி 53 ரன்களை விளாசி அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடிவருகிறார்.
14 ஓவர்கள் முடிவில் உ.பி. அணி 4 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 99 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
14 ஓவர்கள் முடிவில் உ.பி. அணி 4 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 109 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
10.1 ஓவரில் தடுமாறிக்கொண்டு இருந்த தீப்தி ஷர்மாவை ராதா யாதவ் வெளியேற்றியுள்ளார். அவர் 20 பந்தில் 12 ரன்கள் சேர்த்தார்.
8 ஓவர்கள் முடிவில் உ.பி. வாரியர்ஸ் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 141 ரன்கள் தேவை.
8 ஓவர்கள் முடிவில் உ.பி. வாரியர்ஸ் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் சேர்த்துள்ளது.
7 ஓவர்கள் முடிவில் உ.பி. வாரியர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் சேர்த்துள்ளது.
உத்தரபிரதேச அணிக்காக அதிரடியாக ஆடிய கேப்டன் ஹேலி 17 பந்துகளில் 24 ரன்களுடன், கிரண் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக விளையாடிவந்த கேப்சி இஸ்மாயில் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். இவர் 10 பந்தில் 21 ரன்கள் எடுத்தார்.
14 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் குவித்துள்ளது.
13 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் குவித்துள்ளது.
சிறப்பாக விளையாடி வந்த மெக் லேனிங் 42 பந்தில் 70 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆகியுள்ளார். அவர் 10 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசியுள்ளார்.
11 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் குவித்துள்ளது
10.4 ஓவர்களில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் சேர்த்துள்ளது.
10.2 வது ஓவரில் மரிசான் கேப் 16 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
மழைக்குப் பின் போடப்பட்ட்ட 10வது ஓவரின் முதல் பந்து பவுண்டரிக்கு விரட்டப்பட்டது. 10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் சேர்த்துள்ளது.
மழையால் குறுக்கிட்ட போட்டி 8.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 ஓவர்கள் முடிவடைந்துள்ள நிலையில் மழை குறிக்கிட்டுள்ளதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பtடுள்ளது. தற்போது டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழந்து 87 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி வருகிறது.
32 பந்தில் மெக் லேனிங் 52 ரன்கள் விளாசியுள்ளார். இவர் இதுவரை 7 பவுண்டரி 3 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார்.
8 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் விளாசியுள்ளது. லேனிங் மட்டும் 29 பந்தில் 46 ரன்கள் சேர்த்துள்ளார்.
7 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்க வீராங்கானையாக களமிறாங்கி நிதானமாக ஆடிவந்த ஷேஃபாலி வர்மா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார்.
6 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் சேர்த்துள்ளனர். 6 ஓவரில் மட்டும் நான்கு பவுண்டரிகள் விளாசப்பட்டுள்ளது..!
5.2 ஓவரில் டெல்லி அணி 50 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகிறது.
ஐந்து ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் விளாசியுள்ளது. லேனிங் மட்டும் 21 பந்தில் 31 ரன்கள் சேர்த்துள்ளார்
ஐந்தாவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் மெக் லேனிங் முதல் பந்தில் சிக்ஸரும் இரண்டாவது பந்தில் பவுண்டரியும் விளாசியுள்ளார்.
நான்கு ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் விளாசியுள்ளது.
போட்டியின் நான்காவது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஷேஃபாலி வர்மா சிக்ஸர் விளாசியுள்ளார்.
மூன்றாவது ஓவர் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் சேர்த்துள்ளது.
மூண்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் லேனிங் போட்டியின் முதல் சிக்ஸரை விளாசியுள்ளார்.
இரண்டாவது ஓவர் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த ஓவரில் லேனிங் ஒரு பவுண்டரி அடித்தார்.
முதல் ஓவர் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது.
போட்டியின் முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் மொக் லேனிங் பவுண்டரி அடித்துள்ளார்.
உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியுள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் : மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, மரிசான் கேப், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆலிஸ் கேப்ஸி, ஜெஸ் ஜோனாசென், தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, ராதா யாதவ், தாரா நோரிஸ்
UP வாரியர்ஸ் அணி: அலிசா ஹீலி(w/c), ஸ்வேதா செஹ்ராவத், கிரண் நவ்கிரே, தஹ்லியா மெக்ராத், தீப்தி சர்மா, சிம்ரன் ஷேக், தேவிகா வைத்யா, சோஃபி எக்லெஸ்டோன், ஷப்னிம் இஸ்மாயில், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கெய்க்வாட்
டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் போட்டியானது 5 அணிகளுடன் இந்தாண்டு நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது இந்தியன் பிரீமியர் லீக்கை போன்று, மகளிர் பிரீமியர் லீக் தொடரையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரானது கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி வருகின்ற மார்ச் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 22 போட்டிகள் என கணக்கிடப்பட்டு மும்பையில் உள்ள இரண்டு மைதானங்களில் இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
பங்கேற்றுள்ள அணிகள்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ), டெல்லி கேபிடல்ஸ் (டிசி), குஜராத் ஜெயண்ட்ஸ் (ஜிஜி) மற்றும் யுபி வாரியர்ஸ் (யுபிடபிள்யூ) ஆகிய ஐந்து அணிகள் இந்த முதல் சீசனில் பங்கேற்கின்றன.
இந்த போட்டியில் இன்று மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் உ.பி. வாரியர்ஸ் அணியும் மும்பையில் உள்ள பட்டேல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -