அம்பானி வீட்டு கல்யாணம்:
இந்திய பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் நிறுவனத்தை சேர்ந்த ராதிகா மெர்சண்ட்-க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்களது திருமணம் ஜூலை 12 ஆம் தேதி அன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. அதாவது இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தான் இரு வீட்டாரின் சம்மத்துடன் திருமணம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து தொழில் அதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், மற்றும் பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க், கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்.
படை எடுக்கும் கிரிக்கெட் வீரர்கள்:
இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள குஜராத் நோக்கி படை எடுத்து வருகின்றனர். அதன்படி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இந்த நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக ராஞ்சியில் இருந்து ஜாம்நகர் புறப்பட்டுள்ளார் தோனி. அதேபோல், இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, ஜாகீர் கான், பிராவோ, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், சூர்யகுமார், க்ருனால் பாண்டியா, ரஷீத் கான், சாம் குர்ரன், கிரேம் ஸ்மித் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது தனது மனைவி மற்றும் குழந்தையுடன் லண்டனில் இருப்பதால் அவர் கலந்து கொள்வாரா இல்லையா என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!