இந்தியா - தென்னாப்பிரிக்கா:


தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி அங்கு 3 டி 20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணி போட்டியை சமன் செய்தது. கே.எல்.ராகுல் தலைமையிலான ஒரு நாள் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதில், டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் செயல்படுகள் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியது. 


அதன்படி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.


முன்னதாக கடந்த டிசம்பர்  26 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி , தென்னாப்பிரிக்காவின் கௌடெங்கில் உள்ள செஞ்சுரியன் ”சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட்” மைதானத்தில் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்றது. அதன்படி, முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், தங்களது முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி அதிரடியாக விளையாடி மொத்தம் 408 ரன்களை குவித்தது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 131 ரன்களில் ஆல் அவுட் ஆகி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென்னப்பிரிக்க அணியிடம் தோல்வியை தழுவியது. 


கேப் டவுன் மைதானம்:


இதனைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜனவரி 3 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இதனிடையே இந்த ஆட்டம் 2 நாட்களில் முடிவுக்கு வந்தது.  அதன்படி, முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 55 ரன்கள் மட்டுமே எடுக்க அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 153 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் நடைபெற்றது.


இதில் தென்னாப்பிரிக்க அணி 176 ரன்களில் ஆல் அவுட் ஆக இந்திய அணி 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 80 ரன்களை தொட்டது. இதனால் இரண்டாவது நாள் ஆட்டத்திலேயே இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது.


விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்திருப்பார்கள்:


இதனிடையே, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டி பற்றி கூறுகையில் “இந்தியாவில் ஒரு டெஸ்ட் 2வது நாளில் முடிந்திருந்தால், பலரும் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து இருப்பார்கள்” என்று கூறியிருந்தார். 


ஆம், இந்திய மண்ணில் இது போன்ற டெஸ்ட் போட்டிகள் இரண்டே நாட்களில் நடந்து முடிந்திருந்தால் நெட்டிசன்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருப்பார்கள். மைதானத்தில் தன்மை குறித்து மிகப்பெரிய விவாதமே நடந்து முடிந்திருக்கும்.  ஆனால் தென்னாப்பிரிக்காவில்  இருக்கும் ரசிகர்கள் மைதானத்தின் தன்மை அப்படி என்று ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எது எப்படியோ தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டிகள் எப்போதும் கிரிகெட் வரலாற்றில் நிலைத்திருக்கும்.


மேலும் படிக்க: 2024 T20 World Cup: டி 20 உலகக் கோப்பை...”விராட் கோலியும் ரோகித் சர்மாவும்...” - இர்பான் பதான் சொன்ன அந்த வார்த்தை!


மேலும் படிக்க: WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்... முதல் இடத்தை அடித்து தூக்கிய ரோகித் படை!