தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட்:


இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி20 போட்டிகள் சமநிலை பெற்றது.


ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஹிட்மேன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமன் செய்து வரலாறு படைத்தது.


ரசிகர்களின் அதிருப்தி:


இதனிடையே, இந்த தொடரை இந்திய அணி சமன் செய்திருந்தாலும் தென்னாப்பிரிக்க தொடருக்கான டெஸ்ட் அணியில் இருந்து அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


ரஞ்சி டிராபியில் சதம் விளாசிய புஜாரா:


முன்னதாக, ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள் நேற்று (ஜனவரி 5) முதல் தொடங்கின. இதில்,சௌராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.


இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஜார்க்கண்ட் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குஷாக்ரா 29 ரன்கள் எடுத்தார். சௌராஷ்டிரா தரப்பில் சிராக் ஜேனி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேப்டன் ஜயதேவ் உனத்கட் மற்றும் ஆதித்யா ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 


இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் சௌராஷ்டிரா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 406 ரன்கள் குவித்துள்ளது. சௌராஷ்டிரா அணிக்காக விளையாடும் புஜாரா சதம் விளாசி அசத்தினார். அதன்படி,  239 பந்துகளில் 19 பவுண்டரிகள் உட்பட 157 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அவருடன் பிரேரக் மன்கத் 23 ரன்களுடன் களத்தில் உள்ளார். இச்சூழலில் தான் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தன்னை நீக்கியது தவறுதான் என்பதை நிரூபிக்கும் வகையில் சம்பவம் செய்துள்ளார் புஜாரா.


மேலும் படிக்க: IND vs SA Test: தென்னாப்பிரிக்க மண்... டெஸ்ட் தொடரில் ’ ’The GOAT ஹிட் மேன்’ ரோகித் சர்மா செய்த வரலாற்று சாதனை!


மேலும் படிக்க: WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்... முதல் இடத்தை அடித்து தூக்கிய ரோகித் படை!