உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. தொடக்கப் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்த அணிகள் மோதுகின்றன. உலகக்கோப்பையை கைவசம் வைத்திருக்கும் அணியும், இறுதிப்போட்டியில் தோற்ற அணியும தொடக்க போட்டியில் மோத வேண்டும் என்ற அடிப்படையில் இரு அணிகளும் மோதுகின்றன.


சேப்பாக்கம்:


இந்த தொடரில், சொந்த மண்ணில் ஆடும் இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள புகழ்பெற்ற சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.


பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட் போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த மைதானம் இந்திய அணிக்கும் ராசியான மைதானம் ஆகும். மேலே உள்ள வீடியோவில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் அழகான தோற்றம் ரம்மியாக காட்டப்பட்டுள்ளது.


இந்த வீடியோவில் சேப்பாக்கம் மைதானத்தின் முகப்பு அறை, வீரர்களின் டிரெஸ்ஸிங் அறை, குளியலறை, உணவு உண்ணும் அறை, மைதானத்திற்கு உள்ளே செல்லும் பாதை, மைதானம் ஆகியவை மிக அழகாக காட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் தவிர்க்க முடியாத கிரிக்கெட் மைதானங்களில் மிகவும் முக்கியமான மைதானம் சென்னை மைதானம் ஆகும்.






இந்தியா - ஆஸ்திரேலியா:


தென்னிந்தியாவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் மிகச்சிறந்த மைதானங்களில் சேப்பாக்கம் மைதானம் ஒன்றாகும். அதுவும் ஐ.பி.எல். போட்டிகளில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தின் ஆஸ்தான மைதானமும் என்பதால் இது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகும்.


இந்த மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா வரும் 8-ந் தேதி மோதிக்கொள்ள உள்ளதால், இரு அணிகளும் சென்னைக்கு வந்துவிட்டனர். அவர்கள் போட்டி தொடங்கும் வரை தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர். சேப்பாக்கம் மைதானம் பேட்டிங், பவுலிங் என இரண்டிற்கும் சாதகமான  மைதானம் என்பதால் வரும் 8-ந் தேதி நடைபெற உள்ள ஆட்டத்தில் அனல்பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


இந்திய அணியில் ரோகித், விராட், சுப்மன்கில், கே.எல்.ராகுல், ஹர்திக், ஜடேஜா பும்ரா, சிராஜ், ஷமி முக்கிய வீரர்களாக உள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ், ஸ்மித், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டார்க் முக்கிய வீரர்களாக உள்ளனர். 2007ம் ஆண்டு ஆசிய லெவன் அணி ஆப்பிரிக்க லெவன் அணிக்கு எதிராக  337 ரன்கள் குவித்ததே இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். பாகிஸ்தான் அணி அதிகபட்சமாக 327 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 299 ரன்களை குவித்துள்ளது. குறைந்தபட்சமாக 2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் கென்ய அணி 69 ரன்களுக்கு ஆல் அவுட்டானது குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும்.  


மேலும் படிக்க: ODI World Cup 2023: பந்தயத்துக்கு நாங்க ரெடி; உலகக்கோப்பையை ரவுண்டு கட்டிய கேப்டன்கள்; பிசிசிஐ வெளியிட்ட புகைப்படம் வைரல்


மேலும் படிக்க: ODI World Cup 2023: நாளை தொடங்கும் முதல் நாள் ஆட்டம்! நரேந்திர மோடி மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள்: என்ன ஸ்பெஷல்!