ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா , டிசம்பர் 14 முதல் கேபாவில் நடக்கவிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேனுக்குப் பயணிக்க வேண்டி இருந்தது.  இதற்காக  இந்திய அணி வீரர்கள் அவர்களது ஹோட்டலில் இருந்து காலை 8:30 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. இந்திய அணி இரண்டு குழுக்கள்  பேருந்துகளில் விமான நிலையத்திற்கு செல்லவிருந்தது. இதற்காக அனைத்து வீரர்களும் உதவி ஊழியர்களும் ஏற்கனவே பேருந்தில் ஏறியிருந்தனர்.


ஜெய்ஸ்வால் தாமதம்:


பயிற்சியாளர் கம்பீர் , தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா, முழு இந்திய அணியுடன், திட்டமிடப்பட்ட நேரத்தின்படி ஹோட்டல் லாபியில் இருந்தனர். ஆனால் யஷஸ்வியை காணவில்லை. பொதுவாக, நேரத்தை கண்டிப்பாக கடைபிடிக்கும் யஷஸ்வி, இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டார், ஆனால் ஜெய்வால் லாபிக்கு சரியான நேரத்தில் வர முடியவில்லை


கோபமான ரோகித்:


ஜெய்ஸ்வாலின் தாமதத்திற்குப் பிறகு , இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கோபமடைந்து பேருந்தில் இருந்து இறங்கி, யஷஸ்வியைக் கண்டுபிடிக்க உதவி ஊழியர்களை வழிநடத்தினார். மேலாளரும் குழுவின் பாதுகாப்பு அதிகாரியும் பேருந்தில் இருந்து இறங்கினர். சிறிது நேர விவாதத்திற்குப் பிறகு, அனைவரும் பேருந்தில் அமர்ந்தனர், இதனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இல்லாமல் பேருந்து விமான நிலையத்திற்கு புறப்பட்டது .


இதையும் படிங்க: Gukesh Dommaraju: ”அம்மா நான் ஜெயிச்சுட்டேன்!” உலக செஸ் சாம்பியன் குகேஷ்.. தனது தாயுடன் கண்கலங்கிய தருணம்!


20 நிமிடம் தாமதம்:


சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, யஷஸ்வி ஹோட்டல் லாபிக்கு வந்து பார்த்தார், அவர் இல்லாமல் பேருந்து ஏற்கனவே புறப்பட்டுவிட்டதைக் கண்டார்,  இருப்பினும், அணி நிர்வாகம் அவருக்கு ஒரு காரை ஏற்பாடு செய்திருந்தது, மேலும் அணியின் மூத்த பாதுகாப்பு அதிகாரி யஷஸ்வியுடன் காரில் விமான நிலையத்திற்கு புறப்பட்டார்.


முக்கியமான போட்டி:


அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் இந்தியா தனது இடத்தைப் பிடிக்க தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முக்கியமானது. தொடர்ந்து மூன்றாவது முறையாக இங்கிலாந்தில் நடைபெறவுள்ள WTC இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதிசெய்ய மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற வேண்டும்.