உலக செஸ்ட் சாம்பியன்ஷிப் இன் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் குகேஷ் 14வது சுற்றில் சீன வீரர் லீரனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். 


இந்தப் போட்டியில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ் 7.5-6.5 என்கிற புள்ளிகள் கணக்கில் வீரனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்தார. இதற்கு முன்பாக இந்தியன் கிராண்ட் மாஸ்டர் ஆன விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் சாம்பியன்சிப் பட்டத்தை வென்றிருந்தார்.


இதையும் படிங்க: World Chess Championship: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் குகேஷ்: சீன வீரரை வீழ்த்திய தமிழர்


நெருக்கடி கொடுத்த குகேஷ்: 


டிங் லிரன் மற்றும் டி குகேஷ் ஆகியோர் 14வது மற்றும் கடைசி சுற்றி ஆட்டத்தில் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர், இதனால் போட்டியில் பெரு,ம் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆட்டத்தை டிராவை நோக்கி நகர்த்த முயன்ற லீரேனை குகேஷ் இடைவிடாமல் அழுத்தம் கொடுத்து கொண்டே இருந்தார். 


குகேஷ் கொடுத்த அழுத்தத்தால் லீரேன் 53 வது நகர்வில்  ஒரு பெரிய  தவறை செய்து போட்டியின் போக்கை மாற்றினார். லீரேனின் தவறை, குகேஷ் அற்புதமாக  பயன்படுத்தி, வெற்றியை  தன் வசப்படுத்தினார், இதன் மூலம்18 வது உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் குகேஷ்


கண்கலங்கிய குகேஷ்:


போட்டியில் வெற்றி பெற்றவுடன் குகேஷின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது, கடவுளுக்கு நன்றியை தெரிவித்துவிட்டு குகேஷ் ஆனந்த கண்ணீருடன் சீன வீரருக்கு கைகளை குலுக்கினார். அருகில் இருந்தவர்கள் அவரிடம் கைகளை குலுக்கி பாராட்டினர். இருப்பினும் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் சிறிது நேரம் குகேஷ் ஆனந்த கண்ணீர் வடித்தார். 






அதன் பிறகு போட்டி நடைப்பெறும் இடத்தில் இருந்து காரில் சென்ற தனது ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்தினார், அருகில் இருந்த சக வீரர்கள் அவரை தேற்றி ஆசுவாசப்படுத்தினர். தொடர்ந்து தனது அம்மாவிடம் செல்போனில் கண்ணீர்விட்ட படியே குகேஷ் தழுதழுத்த குரலில் தனது வெற்றியின் மகிழ்ச்சியை தனது தாயிடம் பகிர்ந்தார்.



இளைய உலக செஸ் சாம்பியன்கள்:



  1. டி குகேஷ்  (இன்று) 18வயது 8 மாதம் 14 நாட்கள்

  2. கேரி காஸ்பரோவ் (1985 இல்) 22 வயது 6 மாதம் 27 நாட்கள்

  3. மேக்னஸ் கார்ல்சன் (2013 இல்) 22 வயது 11 மாதம் 24 நாட்கள்

  4. மிகைல் தால் (1960 இல்) 23 வயது 5 மாதம் 28 நாட்கள்

  5. அனடோலி கார்போவ் (1975 இல்) 23 வயது 10 மாதம் 11 நாட்கள்