ஐபிஎல் போட்டிகள்:
கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் 2024 ஆம் ஆண்டு தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக, ஐ.பி.எல் தொடரின் வீரர்களுக்கான மினி ஏலம் துபாயில் வரும் டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளை சேர்ந்த நிர்வாகங்களும் தங்களது அணிகளில் தக்க வைத்த வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும் நேற்று (நவம்பர் 26) வெளியிட்டது.
அதேபோல், சில அணிகள் டிரேடிங் முறையில் வீரர்களை மாற்றம் செய்து கொண்டது. அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்காக டிரேடிங் செய்யப்பட்டார்.
மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி டிரேடிங் செய்தது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 17.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கேமரூன் கிரீன் தற்போது பெங்களூரு அணி ட்ரேடிங் முறையில் தங்களது அணியில் இணைத்துள்ளது.
எங்கள் அணிக்கு பொருத்தமானவர்:
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இயக்குனர் மோ போபாட், கிரீன் கேமருன் எங்கள் அணிக்கு பொருத்தமானவர் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், “மிடில் ஆர்டரில் எங்கள் அணிக்காவ விளையாடுவதில் மிகவும் பொருத்தமானவர். அவர் ஒரு சக்திவாய்ந்த பேட்ஸ்மேன். அவர் சுழற்பந்து மற்றும் வேகப்பந்துகளை எதிரான நன்றாக எதிர்கொள்வார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் அவருக்கு இருக்கிறது.
அவர் இந்த முறை எங்கள் அணிக்கு வந்ததை ரசிப்பார் என்று நான் நம்புகிறேன். அதேபோல், சமீப காலங்களில் நடைபெற்ற போட்டிகளில் அவர் பிடித்த கேட்சுகள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருந்தது.
நாங்கள் அவரை எடுக்க வேண்டும் என்ற முடிவில் இருந்த போதே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகிகளிடம் பேசிவிட்டோம். முன்னதாக அவரை வேறு எந்த அணியாவது எடுக்கிறதா என்பதையும் கவனித்தோம்“ என்று கூறியுள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இயக்குனர் மோ போபாட்.
இதனிடையேம் மும்பை அணிக்கு மீண்டும் சென்றுள்ளார் ஹர்திக் பாண்டியா. இச்சூழலில், இந்த முறை நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் கண்டிப்பாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது.
மேலும் படிக்க: Hardik Pandya: நிராகரிக்கப்பட்டவருக்காக மல்லுக்கட்டிய அணிகள்; ஹர்திக் பாண்டியாவின் ஐபிஎல் வரலாறு தெரியுமா?
மேலும் படிக்க: Ravi Shastri: உலகக் கோப்பைக்காக சச்சின் 6 முறை காத்திருந்தார்.. டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் - ரவி சாஸ்திரி!