உலகக் கோப்பை 2023க்கு பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது, இன்று மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா தனது அணியில் மாற்றங்களை செய்துள்ளது. கவுகாத்தியில் நடைபெறும் மூன்றாவது டி20 போட்டிக்கு முன் 2 வீரர்களும், இரண்டு போட்டிக்கு பின் 4 என ஆஸ்திரேலிய அணியில் உள்ள 6 வீரர்கள் மீண்டும் ஆஸ்திரேலியா செல்லவுள்ளனர். இந்தநிலையில், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பதை இங்கே பார்க்கலாம். 


ஆஸ்திரேலியாவின் புதிய டி20 அணி:


மேத்யூ வேட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், டிம் டேவிட், பென் ட்வார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், கிறிஸ் கிரீன், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், ஜோஷ் பிலிப், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், கேன் ரிச்சர்ட்சன்


ஆஸ்திரேலியாவின் பழைய டி20 அணி:


மேத்யூ ஷார்ட், ஸ்டீவன் ஸ்மித், ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன் ஹார்டி, மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா, டிராவிஸ் ஹெட், க்ளென் மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்டான்சன்.


 உலகக் கோப்பையில் இடம்பெற்றிருந்த 6 வீரர்கள் சொந்த ஊருக்கு பயணம்: 


இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட வந்த பழைய ஆஸ்திரேலிய அணியில் இருந்து மூன்றாவது டி20க்கு முன்னதாக, அனுபவ பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லெக் ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா இன்று ஆஸ்திரேலியா திரும்பியுள்ளனர். அதேசமயம் ஆல்-ரவுண்டர்கள் கிளென் மேக்ஸ்வெல், ஜோஸ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் சீன் அபோட் ஆகியோர் நாளை அதாவது புதன்கிழமை ஆஸ்திரேலியா திரும்புவார்கள்.  


அவர்களுக்குப் பதிலாக ஜோஷ் பிலிப், பென் மெக்டெர்மாட், பென் ட்வார்ஷூயிஸ், கிறிஸ் கிரீன் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளனர். இன்று கவுகாத்தியில் நடைபெறும் மூன்றாவது டி20 போட்டிக்குப் பிறகு, அடுத்த இரண்டு டி20 போட்டிகளுக்கான புதிய அணியில் இருந்து ஆஸ்திரேலிய அணி ஆடும் 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்யும். 


இருப்பினும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 2 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அளித்த 209 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில், இரண்டாவது போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு 236 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை வழங்கிய இந்தியா, ஆஸ்திரேலியாவை 191 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. இதன்மூலம், இந்திய அணி இரண்டாவது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 


இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெறவுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான எஞ்சிய 2 டி20 போட்டிகள் ராய்பூர் மற்றும் பெங்களூரில் நடைபெற உள்ளது.