ஆஸ்திரேலிய நாட்டின் முக்கியமான டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மெல்பேர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ட்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் விளையாடுகிறார். 


இந்நிலையில் இன்றைய போட்டியில் அவர் முதல் விக்கெட்டை எடுத்த பிறகு கொண்டாடிய விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன்படி தன்னுடைய முதல் விக்கெட்டை அவர் இன்று வீழ்த்தியவுடன் கைகளை கிறுமி நாசினி வைத்து சுத்தம் செய்வது போல் செய்கை காட்டினார். அதன்பின்னர் தன்னுடைய பையில் இருந்த முகக்கவசத்தை எடுத்து அணிந்து கொண்டார். அவரின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரையும் கவர்ந்துள்ளது. இந்த சம்வபம் தொடர்பான வீடியோவை பிக்பேஷ் லீக் தொடரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.  மேலும் படிக்க:என்றும் வலிமை... எப்போதும் பீஸ்ட்... இது இந்தியாவின் தூண்... கிரிக்கெட் உலகின் ‛டான்’ டிராவிட்!


 






இந்த தருணத்தை அந்த பக்கெட் தருணமாக பிக்பேஷ் தொடர் கணக்கில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்து பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


 






 






 


முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃபிற்கு பரிசு கொடுத்தார். அதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஹரிஸ் ராஃப் பதிவிட்டிருந்தார். அதன்மூலம் இவர் மிகவும் பிரபலம் அடைந்தார். அதற்குபிறகு தற்போது பிக்பேஷ் தொடரில் தன்னுடைய செயல் மூலம் மீண்டும் வைரலாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: அந்நிய மண்ணில் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறிய டிராவிட்டின் டாப்- 5 இன்னிங்ஸ் வீடியோ !