கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் மொத்தம் 48-லீக் ஆட்டங்களை கொண்ட இந்த தொடரின் 40-வது லீக் போட்டி இன்று (அக்டோபர் 8) நடைபெற்று வருகிறது. 


மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இங்கிலாந்து அணியும் நெதர்லாந்து அணியும் விளையாடி வருகிறது.


முன்னதாக, இந்த உலகக் கோப்பை தொடரில் அவுட்டாப் பார்மில் இருந்த இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார்.


அதன்படி, டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் ஆகியோர் களமிறங்கி அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.


இதில் 17 பந்துகளில் 2 பவுண்டரிகள் விளாசிய பேர்ஸ்டோவ் 15 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்தார் டேவிட் மாலன். 74 பந்துகள் களத்தில் நின்ற அவர் 10 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 87 ரன்களை குவித்தார். 


பின்னர் வந்த ஜோ ரூட் 28 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்தாதக களம் இறங்கினார் பென் ஸ்டோக்ஸ். இந்த உலகக் கோப்பை தொடரில் சொதப்பி வந்த அவர் இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.


மீண்டு வந்த பென் ஸ்டோக்ஸ்:


முன்னதாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்களும், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ரன் ஏதும் எடுக்காமலும் விக்கெட்டை பறிகொடுத்திருந்தார் பென் ஸ்டோக்ஸ்.


இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். அவரது அதிரடியை பார்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.


இச்சூழலில், தான் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசி மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளார். அந்த வகையில்,   78 பந்துகளில் சதம் அடுத்த அவர், மொத்தம் 84 பந்துகள் களத்தில் நின்று 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என மொத்தம் 108 ரன்களை குவித்தார்.  இதனிடையே மீண்டு வந்த பென் ஸ்டோக்ஸை சமூக வளைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.


முன்னதாக இன்றைய போட்டியில், இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்களை குவித்துள்ளது. தற்போது 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது.


மேலும் படிக்க: Shubman Gill: நம்பர் 1 இடத்தை பிடித்த 4-வது இந்தியர்.. சச்சின் சாதனையை முறியடித்து சுப்மன் கில் ஆதிக்கம்..!


மேலும் படிக்க: ICC Rankings: என் கொடி பறக்கவேண்டிய இடத்துல எவன் கொடிடா பறக்கும்.. கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி