ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய தொடக்க வீரர் சுப்மன் கில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை பிந்தள்ளி நம்பர்-1 இடத்தை பிடித்தார். முன்னதாக, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் இருந்தார். ஆனால், நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் பாபர் அசாம் பெரியளவில் ஜோபிக்கவில்லை. இதன் காரணமாக சுப்மன் கில் முதலிடம் பிடித்ததோடு, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிலரும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.


இதையடுத்து இந்த பட்டியலில் சுப்மன் கில் தவிர, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டாப்-10 பேட்ஸ்மேன்களில் இடம்பெற்றுள்ளனர். விராட் கோலி நான்காவது இடத்திலும், ரோஹித் சர்மா ஆறாவது இடத்தில் உள்ளனர். 


டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களிலும் இந்திய வீரர்களின் ஆதிக்கம்...


 ஒருநாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி20 என ஆகிய வடிவங்களில் இந்திய அணி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம் மூன்று வடிவங்களிலும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. ஐசிசி ஒருநாள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்திலும், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முகமது சிராஜ் முதலிடத்திலும் உள்ளனர்.


தொடர்ந்து, டெஸ்ட் ஃபார்மேட்டில் நம்பர்-1 பந்துவீச்சாளராக ரவி அஸ்வின் அஸ்திவாரம் அமைத்துள்ளார். அதேசமயம், ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டியில் நம்பர்-1 ஆல்ரவுண்டராக இருக்கும் நிலையில், டி20 பேட்ஸ்மேன்களில் சூர்யகுமார் யாதவ் நம்பர்-1 பேட்ஸ்மேனாக நீண்ட காலமாக இருந்து வருகிறார். 


பேட்ஸ்மேன்களாக ICC ODI தரவரிசை



  1. சுப்மன் கில் - 830 புள்ளிகள்

  2. பாபர் ஆசம் - 824 புள்ளிகள்

  3. குயின்டன் டி காக் - 771 புள்ளிகள்

  4. விராட் கோலி - 770 புள்ளிகள்

  5. டேவிட் வார்னர் - 743 புள்ளிகள்

  6. ரோஹித் சர்மா – 739 புள்ளிகள்

  7. ரஸ்ஸி வான் டெர் டுசென் - 730 புள்ளிகள்

  8. ஹாரி டெக்டர் - 729 புள்ளிகள்

  9. ஹென்ரிச் கிளாசென் - 725 புள்ளிகள்

  10. டேவிட் மாலன் - 704 புள்ளிகள்


பந்துவீச்சாளர்களுக்கான ICC ODI தரவரிசை



  1. முகமது சிராஜ் – 709 புள்ளிகள்

  2.  கேசவ் மகாராஜ் - 694 புள்ளிகள்

  3. ஆடம் ஜம்பா - 662 புள்ளிகள்

  4. குல்தீப் யாதவ் - 661 புள்ளிகள்

  5. ஷஹீன் ஷா அப்ரிடி - 658 புள்ளிகள்

  6. ஜோஷ் ஹேசில்வுட் - 658 புள்ளிகள்

  7. ரஷித் கான் – 655 புள்ளிகள்

  8. ஜஸ்பிரித் பும்ரா - 654 புள்ளிகள்

  9. டிரென்ட் போல்ட் - 638 புள்ளிகள்

  10. முகமது ஷமி – 635 புள்ளிகள்


ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை சுப்மன் கில் படைத்தார்..


முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் போட்டியில் நம்பர்-1 பேட்ஸ்மேனாக இருந்தார். ஆனால் இப்போது இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார். இதன்மூலம்,  ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார் சுப்மன் கில். சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் ஆவார். இதையடுத்து, இரண்டாவது பேட்ஸ்மேனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2004-2005 காலக்கட்டத்தில் இருந்தார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு, விராட் கோலி ஒருநாள் தரவரிசையில் நீண்ட காலமாக முதல் இடத்தைப் பிடித்திருந்தார். அதே நேரத்தில், இப்போது ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் இடம் பிடித்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார் சுப்மன் கில். 


மேலும், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்த இந்தியாவின் இளம் வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். முன்னதாக இந்த சாதனையை சச்சின் தனது 25வது வயதில் படைத்த நிலையில், இதை சுப்மன் கில் தனது 24வது வயதிலேயே எட்டினார்.