உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவின் கைதான் ஓங்கியுள்ளது. நாளுக்கு நாள் இந்திய அணி விளையாடும் போட்டிகளை காணும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இச்சூழலில், ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் இந்தியாவின் ஆதிக்கம் தான் நீடித்து வருகிறது. அதன்படி அனைத்திலும் நம்பர் ஒன்னாக இருக்கும் இந்திய அணி தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
நம்பர் ஒன் டெஸ்ட் அணி:
சர்வதேச கிரிக்கெட் உலகின் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தான் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணி முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்திய அணி 118 என்ற ரேட்டிங் அடிப்படையில் முதல் இடத்திலும், அதே ரேட்டிங்கில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணி 115 ரேட்டிங்கில் மூன்றாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி நான்காவது இடத்திலும், நியூசிலாந்து அணி ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றன.
நம்பர் ஒன் ஒருநாள் அணி:
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நன்றாக விளையாடி வருகிறது. 121 என்ற ரேட்டிங் அடிப்படையில் இந்திய அணி சிறந்த ஒரு நாள் அணிகளின் பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணியும் இருக்கின்றன. நான்காவது இடத்தில் பாகிஸ்தான் அணியும், ஐந்தாவது இடத்தில் நியூசிலாந்து அணியும் உள்ளன.
நம்பர் ஒன் டி20 அணி:
265 என்ற ரேட்டிங் அடிப்படையில் டி 20 புள்ளிப்பட்டியிலிலும் இந்திய அணி தான் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியும் இந்த பட்டியலில் இருக்கின்றன. அதேபோல், நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன.
சிறந்த பேட்ஸ்மென்:
சிறந்த பேட்ஸ்மென் பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடத்தில் இருக்கிறார். அதன்படி 830 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 824 புள்ளிகளுடன் பாபர் அசாம் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்
சிறந்த பந்து வீச்சாளர்:
சிறப்பாக பந்து வீசி வரும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 709 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார். தென்னாப்பிரிக்க வீரர் கேஷவ் மகாராஜ் 694 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர்:
சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர் பட்டியலில் அஸ்வின் முதல் இடத்தில் உள்ளார். அந்த வகையில் தான் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
சிறந்த டெஸ்ட் ஆல்ரவுண்டர்:
சிறந்த டெஸ்ட் ஆல்ரவுண்டர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா.
மேலும் படிக்க: Shubman Gill: நம்பர் 1 இடத்தை பிடித்த 4-வது இந்தியர்.. சச்சின் சாதனையை முறியடித்து சுப்மன் கில் ஆதிக்கம்..!