பி.சி.சி.ஐ. தேர்வுக்குழு தலைவராக பொறுப்பு வகிப்பவர் சேத்தன் சர்மா. இவர் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆவார். இவரிடம் தனியார் தொலைக்காட்சி அளித்த ஸ்டிங் ஆபரேஷனில் இந்திய அணியில் நடந்த விவகாரங்கள் பற்றியும், இந்திய வீரர்கள் பற்றியும் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஊசி பயன்படுத்தும் வீரர்கள்:
குறிப்பாக, இந்திய வீரர்கள் உடற்தகுதிக்காக ஊசி பயன்படுத்துகின்றர் என்று அவர் வெளியிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேத்தன் சர்மா கூறியிருப்பதாவது, “சில இந்திய சூப்பர்ஸ்டார் வீரர்கள் ஊசிகளை செலுத்திக்கொண்டு 100 சதவீதம் தயாராகின்றனர். அந்த ஊசிகளை அவர்கள் பயன்படுத்தியது ஊக்கமருந்து சோதனையில் கண்டுபிடிக்கவும் முடியாது. இதை வீரர்கள் நன்றாக அறிந்து வைத்திருந்தனர்.
அவர்களுக்கு உடற்தகுதி இல்லை. ஆனால், ஊசி செலுத்திக்கொண்டு விளையாடுகின்றனர். அவர்கள் 80 சதவீத உடற்தகுதியுடன் கூட விளையாட தயாராக உள்ளனர். இதனால், ஊசி செலுத்திக்கொண்டு விளையாட ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் வலி நிவாரணிகளை எடுத்துக்கொணடால் அது டோப்பிங்கில் வரும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
ஊக்க மருந்தா?
ஊக்க மருந்து பரிசோதனையில் கண்டுபிடிக்காத அளவிற்கு ஊசி செலுத்திக் கொள்கின்றனர் என்றால் அது ஊக்கமருந்தாக இருக்கும் என்று சந்தேகம் எழுந்துள்ளது மேலும், ஊக்க மருந்து சோதனைகளில் சிக்காத அளவிற்கு அவர்களுக்கான ஊசிகளை அவர்களது தனிப்பட்ட மருத்துவர்கள் வழங்குகின்றனரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சேத்தன் சர்மா இந்திய சூப்பர்ஸ்டார் வீரர்கள் என்று குறிப்பிட்டுள்ளாரே தவிர, எந்தெந்த வீரர்கள் இதுபோன்ற ஊசிகளை செலுத்திக் கொள்கின்றனர் என்று தகவல்களை கூறவில்லை. இதனால், இதுபோன்ற ஊசியை செலுத்திக்கொண்டது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. நட்சத்திர வீரர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளதால் முக்கிய வீரர்கள் யார்? யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
யார் அந்த வீரர்கள்?
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன்சர்மாவே, இந்திய வீரர்கள் ஊசி பயன்படுத்துவதாக கூறியிருப்பது இந்திய கிரிக்கெட் அணி மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. மேலும், ஊசி பயன்படுத்திய வீரர்கள் யார்? யார்? என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
மேலும், பி.சி.சி.ஐ..தலைவராக பொறுப்பு வகித்த சவ்ரவ் கங்குலிக்கு விராட்கோலியை சுத்தமாக பிடிக்காது என்றும், ரோகித்சர்மா - விராட்கோலி இடையே ஈகோ உள்ளதாகவும் பல்வேறு அதிர்ச்சி தகவல்களையும் அவர் வெளியிட்டார். சேத்தன்சர்மாவின் இந்த தகவல்கள்தான் தற்போது இந்திய கிரிக்கெட் உலகின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
மேலும் படிக்க:'கங்குலிக்கு கோலியை சுத்தமா பிடிக்காது..' 'ரோகித்துக்கும், விராட்டுக்கும் ஈகோ' - சேத்தன் சர்மாவால் கதிகலங்கிய பி.சி.சி.ஐ.
மேலும் படிக்க: Pujara Test Record: 100வது டெஸ்டில் இந்திய அணிக்காக களம்.. இதுவரை புஜாராவின் சாதனைகளும், கடந்து வந்த பாதைகளும்!