இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும், டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டுமான சேதேஷ்வர் புஜாரா இதுவரை தனது வாழ்க்கையில் 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் களமிறங்குவதன் மூலம் புஜாரா தனது 100வது டெஸ்டில் விளையாட இருக்கிறார். 


இதுவரை புஜாரா டெஸ்டில் செய்த சாதனைகள்:


99 டெஸ்ட் போட்டிகளுடன், இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய புஜாரா 13வது இடத்தில் உள்ளார். முன்னாள் இந்திய வீரர் முகமது அசாருதீனும் 99 போட்டிகளில் விளையாடி சமநிலையில் உள்ளார். டெல்லி டெஸ்டில் களமிறங்கினால் அசாருதீனின் சாதனையை புஜாரா முறியடித்து  அசாருதீனை 14 வது இடத்திற்கு பின்தள்ளுவார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 


100 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள இந்திய வீரர்கள் பட்டியல்: 



  1. சச்சின் டெண்டுல்கர் : 200 டெஸ்ட்

  2. ராகுல் டிராவிட்: 163 டெஸ்ட்

  3. விவிஎஸ் லட்சுமண்: 134 டெஸ்ட்

  4. அனில் கும்ப்ளே: 132 டெஸ்ட்

  5. கபில்தேவ்: 131 டெஸ்ட்

  6. சுனில் கவாஸ்கர்: 125 டெஸ்ட்

  7. திலீப் வெங்சர்க்கார்: 116 டெஸ்ட்

  8. சவுரவ் கங்குலி: 113 டெஸ்ட்

  9. இஷாந்த் சர்மா : 104 டெஸ்ட்

  10. விராட் கோலி : 105 டெஸ்ட்

  11. ஹர்பஜன் சிங்: 103 டெஸ்ட்

  12. வீரேந்திர சேவாக்: 103 டெஸ்ட் 



  • புஜாரா தனது டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை மொத்தம் 7021 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் புஜாரா 8வது இடத்தில் உள்ளார். முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 7212 டெஸ்ட் ரன்களுடன் 7வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 15921 ரன்களுடன் முதலிடத்திலும் இருக்கிறார்.

  • புஜாரா தனது டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை அதிகபட்சமாக 206 * ரன்கள் எடுத்துள்ளார். இந்தியாவுக்காக அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் அடித்ததன் அடிப்படையில் புஜாரா 37வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் வீரேந்திர சேவாக் 319 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

  • டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா சராசரி 44.15. இந்திய கிரிக்கெட் வீரர்களின் அதிகபட்ச டெஸ்ட் சராசரியை பொறுத்தவரை புஜாரா 11வது இடத்தில் உள்ளார். அதேசமயம் வினோத் காம்ப்ளி 54.20 சராசரியுடன் முதலிடத்தில் உள்ளார்.

  • இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த 7வது பேட்ஸ்மேன் புஜாரா. இதுவரை மொத்தம் 19 சதங்கள் அடித்துள்ளார்.

  • இந்தியாவுக்காக டெஸ்டில் அரைசதம் அடித்ததன் அடிப்படையில் புஜாரா 7வது இடத்தில் உள்ளார். அவர் இதுவரை மொத்தம் 53 அரைசதங்கள் அடித்துள்ளார். 


பார்டர்- கவாஸ்கர் டிராபி:



  • பார்டர்-கவாஸ்கர் டிராபியில், புஜாரா 21 போட்டிகளில் 38 இன்னிங்ஸ்களில் 52.77 சராசரியில் 1900 ரன்கள் எடுத்துள்ளார். இந்த கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த ஆறாவது பேட்ஸ்மேன் புஜாரா.

  • பார்டர்-கவாஸ்கர் டிராபியில் புஜாரா மொத்தம் 15 முறை 50 ரன்களை கடந்துள்ளார். இந்த கோப்பையில் அதிக அரைசதம் அடித்த நான்காவது பேட்ஸ்மேன் புஜாரா.

  • பார்டர்-கவாஸ்கர் டிராபியில் மொத்தம் 5 சதங்கள் அடித்துள்ளார். இந்த கோப்பையில் அதிக சதம் அடித்த எட்டாவது பேட்ஸ்மேன் புஜாரா. 


புஜாரா சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:


2010 அக்டோபரில் இந்திய அணிக்காக அறிமுகமான சேட்டேஷ்வர் புஜாரா, இதுவரை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 99 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 169 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த அவர், 44.15 சராசரியுடன் 7021 ரன்கள் எடுத்துள்ளார். இதில்19 சதங்களும், 34 அரைசதங்களும் அடங்கும்.  இது தவிர ஒருநாள் போட்டிகளில் 51 ரன்கள் எடுத்துள்ளார்.