இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா 2023ஆம் ஆண்டின் காதலர் தினத்தை மிகவும் சிறப்பான முறையில் - உதய்பூரில் பிரம்மாண்டமான கொண்டாடியுள்ளார். காதலர் தினத்தினை திருமண விழாவாக மாற்றிய பாண்டியா அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சுடன் கிருத்துவ முறைப்படி நடக்கும் திருமணம் போல், கொண்டாடிய புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“மூன்று வருடங்களுக்கு முன் எடுத்த முடிவினை புதுப்பிக்க இந்த காதல் காதலர் தினத்தை கொண்டாடினோம். எங்கள் காதலைக் கொண்டாட எங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் எங்களுடன் இருக்கிறார்கள். நாங்கள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ”என்று தம்பதியினர் தங்கள் சமூகவலைதளப்பக்கதில் குறிப்பிட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு சட்டப்படி திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.