இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) நடப்பு சீசனில், கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், பேட்டிங்கின் மூலம் சிறப்பான சதம் அடித்தார். நேற்றைய காலி டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பாபர் சதம் அடித்ததன் மூலம் ஒட்டுமொத்த டி20 வடிவத்தில் அவரது 10வது சதமாக இது பதிவானது. 

இதையும் படிங்க..

Samudrayaan Mission: சந்திரயானை விடுங்க, சமுத்ரயான் தெரியுமா? ரூ.5000 கோடி செலவு, ஆழ்கடலில் 20 ஆயிரம் அடி பயணம்..!

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சர்வதேச டி20 போட்டியில் இதுவரை 3 சதங்களை அடித்துள்ளார். அதனை தொடர்ந்து, வைட்டலிட்டி பிளாஸ்ட்டில் சாமர்செட் மற்றும் சென்ட்ரல் பஞ்சாப் அணிக்காக தலா 2 சதங்களும், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் சல்விக்காக 2 சதங்களும் அடித்துள்ளார். தற்போது, பாபர் அசாம் லங்கா பிரீமியர் லீக்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்து டி20 போட்டிகளில் 10 சதங்களை அடித்துள்ளார். 

இதற்கு முன், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியோ, ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னரோ செய்யாத சாதனையை பாபர் அசாம் தனது சதத்தின் மூலம் செய்துள்ளார். 59 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உதவியுடன் 104 ரன்கள் எடுத்த ​​பாபர் அசாம் சதம் விளாசினார். டி20 வடிவத்தில் கிறிஸ் கெயிலுக்குப் பிறகு 10 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை பாபர் அசாம் தற்போது படைத்துள்ளார். 

யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் டி20 வடிவத்தில் அதிக சதங்கள் அடித்ததில் முதலிடத்தில் உள்ளார், ஒட்டுமொத்தமாக அவர் டி20 வடிவத்தில் 22 சதங்கள் அடித்துள்ளார். அதே நேரத்தில், பாபர் அசாம் 10 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மைக்கேல் காலிங்கர், டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி ஆகியோர் 8-8 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

வீரர்கள் 100 50 போட்டிகள் ரன்கள் ஸ்ட்ரைக் ரேட்
கிறிஸ் கெய்ல் (WI) 22 88 463 14,562 144.75
பாபர் அசாம் (PAK) 10 77 264 7,293 129.05
மைக்கேல் கிளிங்கர் (AUS) 8 33 206 5,960 123.08
டேவிட் வார்னர் (AUS) 8 99 356 11,695 140.61
விராட் கோலி (IND) 8 91 374 8,972 133.35
ஆரோன் பின்ச் (AUS) 8 77 382 8,223 138.53

 

முன்னதாக, லங்கா பிரீமியர் லீக்கில் விளையாடுவது குறித்து பாபர் அசாம் தெரிவித்திருந்தார். அதில், “ இந்த லீக் மூலம் வரவிருக்கும் ஆசிய கோப்பை மற்றும் பின்னர் உலகக் கோப்பைக்கு தன்னை தயார்படுத்திக் கொள்வேன். நீங்கள் வெவ்வேறு லீக்குகளில் விளையாடும் போதெல்லாம், வெவ்வேறு சூழ்நிலைகளில் நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இன்னும் சில மாதங்களில் ஆசியாவில் நிறைய கிரிக்கெட் விளையாட இருக்கிறோம். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த பெரிய போட்டிகளை மனதில் வைத்து நான் விளையாட முயற்சிப்பேன். இதனால் அழுத்தத்தின் கீழ் எப்படி விளையாடுவது என்பது பற்றிய யோசனை கிடைக்கும்.” என்றார்.