ஆஸ்திரேலிய அணி வீரர் கேமரூன் கிரீன் நாள்பட்ட சிறுநீரக நோயுடன் போராடி வருவதாக கூறியுள்ளார். இது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அங்கு நடைபெறும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நேற்று (டிசம்பர் 14) தொடங்கிய இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான ஓர் அங்கமாக கருதப்படுகிறது. ஆனால் இந்த தொடரில் கேமரூன் கிரீன் இடம்பெறவில்லை.


நாள்பட்ட சிறுநீரக நோய்:


இந்நிலையில், நாள்பட்ட சிறுநீரக நோயுடன் போராடி வருவதாக கேமரூன் கீரின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், "எனக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் இருப்பதாக நான் பிறந்தபோது என் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது.


இந்த சிறுநீரக நோயின் அறிகுறிகள் வெளியில் தெரியாது. இந்த நாள்பட்ட சிறுநீரக நோய் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீரகத்தின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பாதிப்பு தற்போது 60 சதவீதமாக உள்ளது. 


இரண்டாவது கட்டம்:


எனது சிறுநீரக பாதிப்பு இரண்டாவது கட்டத்தில் உள்ளது. எனக்கு சிறிது அதிர்ஷ்டம் இருக்கிறது என நினைக்கிறேன். நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாக பெரிய அளவில் சிரமங்களை எதிர்கொள்வார்கள். ஆனால், நான் உடல்ரீதியாக பெரிய அளவிலான சிரமங்களை சந்திக்கவில்லை. சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் அவற்றை பழைய நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாது. சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த முடியும்” என்று கூறியுள்ளார் கேமரூன் கிரீன்.


தொடர்ந்து பேசிய அவர், “இன்றுவரை தனது வாழ்க்கை முழுவதும் இந்த சிக்கலை எதிர்கொண்டு வருகிறேன். நான் ஒரு அழகான பந்து வீச்சையும், பேட்டிங்கையும் கொண்டிருந்தேன். கடந்த ஆண்டு கெய்ர்ன்ஸில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் எனக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது.






சிறுநீரக பாதிப்பால் தான் எனக்கு தசைப்பிடிப்பு ஏற்படுகிறது என்பதை நான் உணர நாள்கள் அதிகம் எடுத்துக்கொண்டேன். நான் போதுமான அளவு சாப்பிடவில்லை, குடிக்கவில்லை ,விளையாட்டின் போது என்னை கவனித்துக் கொள்ளவில்லை.


ஆனால் நான் எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறேன் என்று காலப்போக்கில் உணர்ந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்னும் தசைப்பிடிப்பால் அவதிப்படுகிறேன். ” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் கேமரூன் கிரீன்.


 


 


மேலும் படிக்க: Mohammed Shami: உலகக்கோப்பை தோல்வி; நாங்கள் மனதளவில் தயாராக பிரதமர் மோடிதான் காரணம் - முகமது ஷமி


 


மேலும் படிக்க: SA Vs IND T20: டாஸ் வென்றது தென்னாப்பிரிக்கா; எடுபடுமா இந்தியாவின் பேட்டிங் யுக்தி