இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இதனால் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது. 


மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி மழையால் தடைபட்டது. இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரினை சமன் செய்யும். ஆனால் சொந்த மண்ணில் களமிறங்கும் தென்னப்பிரிக்கா தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. 


போட்டி நடைபெறும் மைதானமான ஜோகன்பெர்ஹில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் தான் முதலாவது டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணி மோதின. தோனி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா கடைசிப் பந்தில் வெற்றி பெற்றது. 


நிறைவேறுமா பிசிசிஐ கணக்கு 


அடுத்த ஆண்டு ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸிலும் அமெரிக்காவிலும் நடைபெறுகின்றது. இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியைத் தேர்வு செய்வதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதனால் வரும் காலங்களில் டி20 போட்டிகளில் இளம் இந்திய வீரர்களை களமிறக்கி வீரர்களை தயார் செய்து வருகின்றது. இதுவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தற்போது பெரும் நம்பிக்கையாக உள்ள வீரர் என்றால் 5வது வீரராக களமிறங்கும் ரிங்கு சிங்தான். 


இரு அணிகளின் ப்ளேயிங் லெவன்


தென்னாப்பிரிக்கா ப்ளேயிங் லெவன்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், டொனோவன் ஃபெரீரா, அண்டில் பெஹ்லுக்வாயோ, கேசவ் மகராஜ், லிசாட் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி, நான்ட்ரே பர்கர்


இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்