பார்டர் கவாஸ்கர் ட்ராபி:


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் ட்ராபி கிரிக்கெட் தொடர் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 8 வாரம் ஓய்வு எடுக்க உள்ளதாக கூறியிருக்கிறார்.


இது தொடர்பாக பேசிய அவர், " பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபி இதற்கு முன்னர் நான் வெல்லாத ஒரு கோப்பையாகும். எங்கள் ஆஸ்திரேலியா அணியில் இதுவரை பலர் வெல்லாத ஒரு கோப்பை இதுவாகும். கடந்த சில வருடங்களாகவே டெஸ்ட் தொடரில் அற்புதமான சாதனைகளை நாங்கள் செய்து வருகிறோம். சொந்த மண்ணில் நடக்கும் ஒவ்வொரு தொடரிலும் சாதிப்பதற்கு ஒவ்வொரு முறையும் வருகிறீர்கள். ஆனால் அதற்கு அணியின் மேல் மட்டத்திலிருந்து முழு தீவிரத்தையும் கொடுத்து விளையாட வேண்டியது அவசியம். இதுதான் இந்த கோடை காலத்தில் நமக்கு இருக்கும் சவாலாகும். இந்தியா மிகவும் திறமையான அணி.


ஓய்வை அறிவித்த பேட் கம்மின்ஸ்:


நாங்கள் அவர்களுடன் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். அதனால் அவர்களை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால் தற்போது நாங்கள் மிகவும் நல்ல நிலையில் இருப்பதைப் போல உணர்கிறோம்.  ஏறக்குறைய 18 மாதங்களுக்கு முன்பு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து நான் இடைவிடாமல் பந்துவீசி வருகிறேன். இதனால் எட்டு வாரங்களுக்கு ஓய்வு எடுக்கிறேன். இதன் மூலம் நான் மீண்டும் புத்துணர்ச்சியுடன் விளையாட முடியும்."என்று பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.


மேலும் படிக்க: Vinesh Phogat: வினேஷ் போகத்திற்கு தங்க பதக்கம்.. மகிழ்ச்சியில் துள்ளி குதித்த கிராமத்தினர்!


மேலும் படிக்க: Jasprit Bumrah: பரபரப்பு.. கேப்டன் பதவி கேட்கும் ஜஸ்ப்ரித் பும்ரா! இந்திய அணியில் ட்விஸ்ட்