பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் ரிஸ்வான், அகா சல்மானின் அபாரமான பேட்டிங்கால் 313 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


பந்து இல்லை என்ற பாகிஸ்தான் வீரர்:


இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி தன்னுடைய 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களுடன் ஆடி வருகிறது. இந்த நிலையில், 2வது நாளான நேற்று மதியம் தேநீர் இடைவேளைக்கு பிறகு ஆட்டத்தின் 46வது ஓவரை ஆமீர் ஜமால் பந்து வீசினார்.


அப்போது, லபுஷேனேவும், ஸ்மித்தும் களத்தில் இருந்தனர். ஜமால் வீசிய பந்தை எதிர்கொள்ள லபுஷேனே தயாராக நின்றார். ஜமாலும் பந்துவீச வேகமாக ஓடி வந்தார். ஆனால், பந்துவீச்சு கிரீசுக்கு அருகில் வரும்போது தனது இரண்டு கையையும் விரித்து தன்னிடம் பந்து கையில் இல்லை என்று சைகை காட்டினார்.






விறுவிறுக்கும் டெஸ்ட்:


இதனால், மைதானத்தில் சிரிப்பலை எழுந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் அணிக்காக ஆடி வரும் ஜமால் இந்த தொடரில்தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். இந்த தொடரில் இதுவரை 3 டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ள ஜமால் சிறப்பாக பந்துவீசி 13 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 197 ரன்கள் பின்தங்கியுள்ள ஆஸ்திரேலிய அணிக்காக லபுஷேனே 23 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


இந்த இன்னிங்சில் இதுவரை ஜமால் 8 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வரும் ஜமால் பாகிஸ்தான் அணியின் எதிர்கால நட்சத்திரமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் மோதிய முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: ICC Test Ranking: ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்... இந்திய வீரர் விராட் கோலிக்கு எத்தனையாவது இடம்! விவரம் உள்ளே!


மேலும் படிக்க: IND vs SA 2nd Test: பழிக்குப் பழி! புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!