Asia Cup 2023 SL VS BAN LIVE: வங்காள தேசத்தை புரட்டி எடுத்த இலங்கை; 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!
Asia Cup 2023 SL VS BAN LIVE: ஆசிய கோப்பை தொடரில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்திருங்கள்.
றுதியில் இலங்கை அணி 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி 11 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
இலங்கை அணி தனது 5வது விக்கெட்டை இழந்தாலும் வெற்றி இலக்கை எட்டிக்கொண்டுள்ளது.
அரைசதம் கடந்து சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்த சமரவிக்ரமா 77 பந்தில் 54 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
29 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் சேர்த்து வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி முன்னேறிக்கொண்டுள்ளது.
நிதானமாக ஆடிவரும் இலங்கை அணி 22 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்துள்ளார்.
இலங்கை அணி 15 ரன்னில் இருந்த போது தனது இரண்டாவது விக்கெட்டை இழந்துள்ளது.
இலங்கை அணி தந்து முதல் விக்கெட்டை 13 ரன்கள் எடுத்த நிலையில் இழந்துள்ளது.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியுள்ளது.
சிறப்பாக பந்து வீசிய இலங்கை அணிக்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்காள தேச அணி 39வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை எட்டியுள்ளது.
30 ஓவர்கள் முடிவில் வங்க தேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் சேர்த்து வைத்துள்ளது.
25.4 ஓவர்களில் வங்காள தேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்துள்ளது.
15 ஓவர்கள் முடிந்த நிலையில் வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 11 ஓவரில் வங்காள தேசம் அணி தனது 3 விக்கெட்டினை இழந்துள்ளது. 11 ஓவர்கள் முடிவில் 37 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது.
10 ஓவர்கள் முடிவில் வங்காள தேச அணி 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் சேர்த்துள்ளது.
வங்காள தேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் டன்ஜின் ஹசன் இலங்கை அணியின் தீக்ஷனா பந்து வீச்சில் தனது விக்கெட்டை ரன் ஏதும் எடுக்காத நிலையில் இழந்து வெளியேறினார்.
இலங்கை அணிக்கு எதிராக வங்காள தேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
முகமது நைம், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், ஷாகிப் அல் ஹசன்(கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்
பாதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ் (விக்கெட்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக(கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, மதீஷா பத்திரன
டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
Background
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆசியக்கோப்பை கிரிக்கெட்:
ஐசிசி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ந் தேதி இந்தியாவில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக நேற்று தொடங்கியது ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்ற்றுள்ளன. 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை வரலாற்றில் இந்த தொடரில் நேபாளம் அணி முதல் முறையாக அறிமுகமாகியது.
இலங்கை - வங்கதேசம் மோதல்:
தொடரின் முதல் போட்டியில் நேபாள அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து, இன்று அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ளன. இலங்கையில் உள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காள தேச அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஓடிடியில் டிஸ்னி ஹாட் ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.
தடுமாறும் இலங்கை:
தொடருக்கான அணியே வெறும் இரண்டு தினங்களுக்கு முன்பு தான் அறிவிக்கப்பட்டது. காரணம் அந்த அணியின் முக்கிய வீரர்களான வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, தில்ஷான் மதுஷங்கா மற்றும் லகிரு குமரா ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குஷால் பெரேரா முழுமையாக குணமடையாததால் அவரும் அணியில் இடம் பெறவில்லை. இதனால், போதிய அனுபவம் இல்லாத வீரர்களுடன் தான் இலங்கை அணி தொடரில் களமிறங்கியுள்ளது.
மீண்டு வருமா இலங்கை?
இந்தியாவுக்கு எதிராகவும், நியூசிலாந்திற்கு எதிராகவும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி , நடப்பாண்டில் சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை மட்டுமே கைப்பற்றியது. அணியின் பேட்டிங் பதும் நிஷங்கா, திமுத் கருணரத்னே, ஷாரித் அசலங்கா ஆகியோரை பெரிதும் சார்ந்து உள்ளது. பந்துவீச்சில் மகேஷ் தீக் ஷனா, கசன் ரஜிதாஆகிய இளம் வீரர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது. கேப்டன் தசன் ஷனகாவும் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதேநேரம், போட்டி உள்ளூரில் நடைபெறுவது இலங்கை அணிக்கு சாதகமாக கருதப்படுகிறது.
வங்கதேச அணி:
பொதுவாக உள்ளூரில் சிறப்பாக விளையாடும் வங்கதேச அணி, நடப்பாண்டில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் வங்கதேச அணியிலும் லிட்டன் தாஸ் உள்ளிட்ட சில நட்சத்திர வீரர்களும் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர். கேப்டன் ஷகிப் அல்ஹசன், முஸ்பிகுர் ரகிம், நஜ்முல் ஷான்டோ ஆகியோர் பேட்டிங்கிலும், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் டஸ்கின் அகமது ஆகியோர் பந்துவீச்சிலும் பலம் சேர்க்கக்கூடும். இதனால், இன்றைய போட்டியில் வெற்றிக்காக இலங்கை மற்றும் வங்கதேச அணியிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -