Asia Cup Promo: இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. 

நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17 ஆம் வரை நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய ஆறு நாடுகள் மோதவுள்ளன. இம்முறை இந்த தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்துகின்றன. 50 ஓவர் போட்டித்தொடரான இந்த தொடருக்கு அனைத்து அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

குறிப்பாக மிகச்சிறய அணிகளாக உள்ள நேபாளம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தீவிர பயிற்சியில் இப்போது இருந்தே ஈடுபட்டு வருகின்றது. உலகக்கோப்பைக்கு முன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகள் எதிர்கொள்ளும் தொடர் என்பதால் இந்த அணிகளுக்கு ஆசிய கோப்பைத் தொடர் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 19ஆம்தேதி ஆசிய கோப்பைக்கான அட்டவணையை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டார். இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் செப்டம்பர் 2ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் ஆசிய கோப்பைத் தொடரை ஒளிபரப்பும் உரிமையை பெற்றுள்ள தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அணி ஆசிய கோப்பைக்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. 

அந்த ப்ரோமோ முழுக்க முழுக்க இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் ரன் மிஷினுமான விராட் கோலியை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதால் விராட் கோலியின் ரசிகர்கள் இந்த ப்ரோமோவை தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து ஃபையர் விட்டுக்கொண்டுள்ளனர். ப்ரோமோ முழுவதும் விராட் கோலி மைதானத்தில் எதிர்கொண்ட மிகவும் உணர்வுப்பூர்வமான காட்சிகளை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பார்ப்பதற்கு மிகவும் ரசிக்கும்படியானதாக உள்ளது. 

முழு போட்டி அட்டவணை: 

தேதி         குரூப் லீக் போட்டிகள் இடம் 
ஆகஸ்ட் - 30     பாகிஸ்தான் vs நேபாளம்  முல்தான் (பாகிஸ்தான்)
ஆகஸ்ட் - 31 வங்கதேசம் vs இலங்கை கண்டி (இலங்கை)
செப்டம்பர் -2 பாகிஸ்தான் vs இந்தியா கண்டி (இலங்கை)
செப்டம்பர் -3 வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் லாகூர் (பாகிஸ்தான்)
செப்டம்பர் -4 இந்தியா vs நேபாளம் கண்டி (இலங்கை)
செப்டம்பர் -5 ஆப்கானிஸ்தான் vs இலங்கை லாகூர் (பாகிஸ்தான்)
  சூப்பர் 4 சுற்றுகள்  
செப்டம்பர் -6 A1 vs B2 லாகூர் (பாகிஸ்தான்)
செப்டம்பர் -9 B1 vs B2  கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -10 A1 vs A2 கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -12 A2 vs B1 கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -14 A1 vs B2 கொழும்பு (இலங்கை)
  இறுதிப்போட்டி  
செப்டம்பர் -17 சூப்பர் 4 சுற்று - 1 vs 2 கொழும்பு (இலங்கை)

Asia Cup 2023 Schedule: நீண்டநாள் காத்திருப்பு..வெளியானது ஆசியக்கோப்பை அட்டவணை.. இந்தியா- பாகிஸ்தான் போட்டி இந்தநாளிலா..?