Asia Cup 2023, BAN Vs PAK LIVE: சூப்பர் 4 சுற்றை வெற்றியோடு தொடங்கிய பாகிஸ்தான்; வங்காளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்..!

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான போட்டிகுறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்திருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 06 Sep 2023 10:08 PM
Asia Cup 2023, BAN Vs PAK LIVE: சூப்பர் 4 சுற்றை வெற்றியோடு தொடங்கிய பாகிஸ்தான்; வங்காளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்..!

தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் தனது விக்கெட்டை 64 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்த முகமது ரிஸ்வான் வெற்றிக்கு அருகில் சென்றபோது  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 11வது அரைசதத்தை விளாசினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 39.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 194 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: ரிஸ்வானும் அரைசதம்..!

பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். இது ஒருநாள் போட்டிகளில் இவரது 11வது அரைசதமாகும். 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: இமாம் உல்-ஹக் அவுட்..!

சிறப்பாக விளையாடி வந்த தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் தனது விக்கெட்டை 78 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார். 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: 150 ரன்களை நெருங்கிய பாகிஸ்தான்..!

பாகிஸ்தான் அணி 31 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் சேர்த்துள்ளது. 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: 25 ஓவர்களில் பாகிஸ்தான்..!

வெற்றி இலக்கை நோக்கி சீராக முன்னேறிக்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 25 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 114 ரன்கள் சேர்த்துள்ளது. 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: அரைசதம் விளாசிய இமாம்..!

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் 61 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார். 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: 100 ரன்களை எட்டிய பாகிஸ்தான்..!

பாகிஸ்தான் அணி 23 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்துள்ளது. 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: 100 ரன்களை நெருங்கிய பாகிஸ்தான்..!

2 விக்கெட்டுகளை இழந்தாலும் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருக்கும் பாகிஸ்தான் அணி 21 ஓவர்கள் முடிவில் 93 ரன்கள் சேர்த்துள்ளது. 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: 11 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான்..!

194 ரன்கள் இலக்கை நோக்கி களமிறாங்கியுள்ள பாகிஸ்தான் அணி 11 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 44 ரன்கள் சேர்த்துள்ளது. 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: முதல் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான்..!

9வது ஓவரின் முதல் பந்தில் பாகிஸ்தான் அணியின் ஃபஹர் ஜமான் தனது விக்கெட்டை 20 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார். 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: சீர் செய்யப்பட்ட மின் விளக்கு கோளாறு..!

மின் விளக்கு சரியாக செயல்படாததால் தடைபட்ட ஆட்டம், கோளாறு சீர் செய்யப்பட்ட பின்னர் தொடங்கியுள்ளது. 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: லைட்ட போடுங்கப்பா.. ஆட்டத்தை நிறுத்திய பாகிஸ்தான்..!

போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் போட்டியை பாகிஸ்தான் அணி நிறுத்தியுள்ளது. மைதானத்தில் உள்ள ராட்சத மின் விளக்குகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: நிதான ஆட்டத்தில் பாகிஸ்தான்..!

5 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் மட்டுமே சேர்த்து மிகவும் நிதானமாக விளையாடி வருகிறது. 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: மெய்டன் ஓவர் வீசிய இஸ்லாம்..!

வங்காள தேச அணியின் சேரிஃபுல் இஸ்லாம் போட்டியின் இரண்டாவது ஓவரை ரன் ஏதும் கொடுக்காமல் மெய்டனாக வீசியுள்ளார். 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: இலக்கைத் துரத்த களமிறங்கிய பாகிஸ்தான்..!

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. 

பாகிஸ்தானுக்கு இலக்கு..!

வங்காள தேச அணி 38.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹாரீஸ் 4 விக்கெட்டுகளும் நசீம் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.  

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: 6 விக்கெட்டை இழந்த வங்காளம்..!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வங்காள தேசத்தின் ஷகிம் ஹைசைன் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 35 ஓவர்கள் முடிவில் வங்காள தேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்துள்ளது. 

ஷகிப் அல் ஹசன் அவுட்... தனி ஆளாக போராடும் அனுபவ வீரர் ரஹீம்..!

வங்கதேச அணிக்காக அபாரமாக ஆடி அரைசதம் விளாசிய ஷகிப் அல் ஹசன் 53 ரன்களில் அவுட்டான நிலையில், ரஹீம் அரைசதம் கடந்து போராடி வருகிறார்.

வங்கதேச அணிக்காக போராடும் ஷகிப் அல் ஹசன் அரைசதம்..!

வங்கதேச அணிக்காக சிறப்பாக ஆடி வரும் ஷகிப் அல் ஹசன் அபாரமாக ஆடி அரைசதம் விளாசியுள்ளார். வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை எடுத்துள்ளது.

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: 25 ஓவர்கள் முடிவில் வங்காளம்..!

வங்காள தேச அணி 25 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் சேர்த்துள்ளது. 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: 100 ரன்களைக் கடந்த வங்காள தேசம்.>!

21 ஒவர்கள் முடிவில் வங்காளதேச அணி 4 விக்கேடுகளை இழந்து 105 ரன்கள் சேர்த்துள்ளது. 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: 15 ஓவர்கள் முடிவில் வங்காள தேசம்..!

15 ஓவர்கள் முடிவில் வங்காள தேசம் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் சேர்ந்துள்ளது. 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: 50 ரன்களை எட்டிய வங்காள தேசம்..!

11வது ஓவரின் இரண்டாவது பந்தில் வங்காள தேசம் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களை எட்டியுள்ளது. 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: 4வது விக்கெட்டும் காலி..!

வங்காளதேச அணி தனது 4வது விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் ஹாரீஸ் இடம் இழந்துள்ளது. 9.1 ஓவரில் அந்த அணி 47 ரன்கள் என்ற நிலையில் உள்ளது. 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: 3 விக்கெட்டை இழந்த வங்காளதேசம்..!

வங்காள தேசம் அணி தனது மூன்றாவது விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் ஹாரீஸ் இடம் இழந்துள்ளது. வங்கள தேசம் அணி 45 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளதால் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: ஆடுகளத்தை விட்டு வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் நசீம்..!

பவுண்டரிக்குச் சென்ற பந்தை தடுக்க முயன்ற பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீமுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் தற்போது ஆடுகளத்தைவிட்டு வெளியேறியுள்ளார். 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: 5 ஓவர்கள் முடிவில்..!

5 ஓவர்கள் முடிவில் வங்காள தேச அணி 2 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் சேர்த்துள்ளது. 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: அஃப்ரிடியிடம் 2வது விக்கெட்டினை பறிகொடுத்த வங்காள தேசம்..!

வங்காள தேச அணி தனது இரண்டாவது விக்கெட்டை 5வது ஓவரின் ஐந்தாவது பந்தில் அஃப்ரிடியிடம் இழந்துள்ளது. அதிரடி ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் தனது விக்கெட்டை 13 பந்தில் 16 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் இழந்து வெளியேறினார். 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: முதல் விக்கெட்டை இழந்த வங்காள தேசம்..!

இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் வங்காளதேச அணி தனது முதல் விக்கெட்டை இழந்துள்ளது. வங்காளதேச அணி இன்னும் தனது ரன் கணக்கை துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: களமிறங்கிய வங்காள தேசம்..!

வங்காளதேச அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கியுள்ளது. 

Asia Cup 2023, BAN Vs PAK LIVE: டாஸ் வென்ற வங்காளதேசம்..!

சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கும் வங்காளதேச அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. 

Background

ஆசியக் கோப்பைத் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், சூப்பர் 4 சுற்றுகள் இன்று எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் இன்று மோதுகின்றன.


இந்த போட்டியில் வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் டாஸ் வென்றார். அவர் முதலில் பேட் செய்வதாக கூறியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள லாகூர் மைதானத்தில் கடாஃபி மைதானத்தில் இந்தா போட்டி நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை மிகவும் பலம் பொருந்திய அணியாக உள்ளது. பேட்டிங், பவுலிங் என்று அந்த அணி மிக வலுவான அணியாகவே இந்த ஆசியக்கோப்பைத் தொடருக்கு வந்துள்ளது.


பேட்டிங்கில் பாபர் அசாம், ரிஸ்வான், இப்திகார், பக்கர் ஜமான், இமாம் உல் ஹக் என்று பெரிய பட்டாளமே உள்ளனர். பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிடும்போது வங்காளதேசம் அணியுடன் சற்று பலம் குன்றிய அணியாகவே உள்ளது.


நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வி அடைந்த நிலையில், கிடைத்த சூப்பர் 4 வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வங்கதேசம் அணி முயற்சிக்கும். வங்கதேசம் அணியிலும் பேட்டிங், பவுலிங்கில் சிறப்பு வாய்ந்த வீரர்கள் உள்ளனர். மெகிதி ஹாசன். சான்டோ அபாரமான ஃபார்மில் உள்ளனர்.


அவர்களது பேட்டிங்கிற்கு முகமது நம், தௌகித். முஷ்பிகிர் ரஹீம் ஆகியோரும் சிறப்பாக ஆடினால் அவர்கள் கண்டிப்பாக பாகிஸ்தானுக்கு சவால் அளிக்கக்கூடும். அனுபவ வீரரும், கேப்டனுமாகிய ஷகிப் அல் ஹசல் ஆல் ரவுண்டர் திறமையில் பாகிஸ்தானுக்கு இம்சை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை ஷாகின் அப்ரிடி, நசீம்ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் பெரும் பலமாக உள்ளனர்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.