Asia Cup 2023 LIVE: இறுதி வரை திக்..திக்.. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை..!

Asia Cup 2023 LIVE: ஆசிய கோப்பையில் இலங்கை ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 05 Sep 2023 10:36 PM
Afghanistan vs Sri Lanka LIVE: இலங்கை வெற்றி..!

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றுள்ளது. 

Afghanistan vs Sri Lanka LIVE: அடுத்தடுத்து செக் வைத்த துனித்..!

இலங்கை அணியின் துனித் வீசிய 32வது ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

Afghanistan vs Sri Lanka LIVE: 6வது விக்கெட்டை இழந்த ஆஃப்கான்..!

அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்த கரீம் ஜனட் தனது விக்கெட்டை 22 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார். 

Afghanistan vs Sri Lanka LIVE: முகமது நபி அவுட்..!

சிறப்பாக ஆடி வந்த முகமது நபி தனது விக்கெட்டை 65 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்துள்ளார். இவர் 6 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசியுள்ளார். 

Afghanistan vs Sri Lanka LIVE: அதிவேக அரைசதம்..!

ஆஃப்கானிஸ்தான் அணியின் நபி 24 பந்தில் அரைசதம் விளாசி அதிவேகமாக அரைசதம் விளாசிய ஆஃப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 

Afghanistan vs Sri Lanka LIVE: 4வது விக்கெட்டை இழந்த ஆஃப்கானிஸ்தான்..!

ஆஃப்கானிஸ்தான் அணி தனது 4வது விக்கெட்டை 18.4வது ஓவரில் இழந்துள்ளது. இந்த அணி வெற்றி பெற இன்னும் 171 ரன்கள் தேவை. இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 6 விக்கெட்டுகள் தேவை. 

Afghanistan vs Sri Lanka LIVE: வந்தார்.. வென்றார்.. பத்திரானா..!

9வது ஓவரை வீசிய பத்திரனா அந்த ஓவரின் முதல் பந்தில் ஆஃப்கானிஸ்தான் அணியின் குல்பாதின் விக்கெட்டை கைப்பற்றினார். இந்த போட்டியில் இவர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றியுள்ளார். 

Afghanistan vs Sri Lanka LIVE: 50 ரன்களை எட்டிய ஆஃப்கானிஸ்தான்..!

8 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் சேர்த்துள்ளது. 

Afghanistan vs Sri Lanka LIVE: இரண்டாவது விக்கெட்டை இழந்த ஆஃப்கானிஸ்தான்..!

5வது ஓவரின் கடைசிப் பந்தில் ஆஃப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அப்போது ஆஃப்கானிஸ்தான் அணி 27 ரன்கள் சேர்த்திருந்தது. 

Afghanistan vs Sri Lanka LIVE: முதல் விக்கெட்டை இழந்த ஆஃப்கானிஸ்தான்..!

ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதலாவது விக்கெட்டை 2.2 ஓவரில் 10 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் இழந்துள்ளது. 

Afghanistan vs Sri Lanka LIVE: 292 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கான்..!

இலங்கை அணி நிர்ணயம் செய்த 292 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. 

Asia Cup 2023 LIVE: இறுதியில் அதிரடி காட்டிய இலங்கை; 50 ஓவர்கள் முடிவில் 291 ரன்கள் குவிப்பு..!

இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் சேர்த்துள்ளது. 

Afghanistan vs Sri Lanka LIVE: 250 ரன்களைக் கடந்த இலங்கை..!

7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் இலங்கை அணி 45 ஓவர்கள் முடிவில் 252 ரன்கள் சேர்த்துள்ளது. 

Afghanistan vs Sri Lanka LIVE: 7 விக்கெட்டை இழந்த இலங்கை..!

இலங்கை அணி தனது 7வது விக்கெட்டை ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் பந்து வீச்சில் இழந்தது. 

Afghanistan vs Sri Lanka LIVE: கை நழுவிப் போன சதம்..!

இலங்கை அணியினை சிறப்பான முறையில் மீட்டு வந்த குஷால் மெண்டிஸ் தனது விக்கெட்டை நான் - ஸ்ட்ரைக்கர் திசையில் நின்றுகொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். இவர் 84 பந்தில் 6 பவுண்டரி 3 சிக்ஸர் என மொத்தம் 92 ரன்கள் சேர்த்திருந்தார். 

Afghanistan vs Sri Lanka LIVE: 5வது விக்கெட்டை இழந்த இலங்கை..!

39வது ஓவரின் முதல் பந்தில் இலங்கை அணியின் தனஞ்ஜெயா ஆட்டமிழந்தார். அப்போது இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் சேர்த்திருந்தது. 

Afghanistan vs Sri Lanka LIVE: 200 ரன்களை எட்டிய இந்தியா..!

4 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் இலங்கை அணி 35வது ஓவர் முடிவில் 200 ரன்களை எட்டியுள்ளது.  

Afghanistan vs Sri Lanka LIVE: உடைந்தது பார்ட்னர்ஷிப்..!

இலங்கை அணியை மெல்ல மெல்ல வலுவான நிலைக்கு கொண்டு வந்த இலங்கை அணியின் பார்ட்னர்ஷிப் பேட்டிங்கை ரஷித் கான் பிரித்துவிட்டார். இவரது பந்தில் அசலங்கா 43 பந்தில் 36 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

Afghanistan vs Sri Lanka LIVE: 30 ஓவர்கள் முடிவில் இலங்கை..!

30 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்துள்ளது. 

Afghanistan vs Sri Lanka LIVE: மெண்டிஸ் பொறுப்பான அரைசதம்..!

இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குஷால் மெண்டிஸ் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக்கொண்டு இருந்தபோது, மிகவும் பொறுப்பாக விளையாடி அரைசதம் விளாசியுள்ளார். இது ஒருநாள் தொடரில் இவரது 23வது அரைசதமாகும். 

Afghanistan vs Sri Lanka LIVE: ரஷித் கான் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசிய மெண்டிஸ்..!

இலங்கை அணியின் மெண்டிஸ் ரஷித் கான் வீசிய 26வது ஓவரில் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசியுள்ளார். 

Afghanistan vs Sri Lanka LIVE: 25 ஓவர்கள் முடிவில்..!

25 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்துள்ளார். 

Afghanistan vs Sri Lanka LIVE: 100 ரன்களை எட்டிய இலங்கை..!

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

Afghanistan vs Sri Lanka LIVE: 3வது விக்கெட்டை கைப்பற்றிய குல்பைதின்..!

இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இதுவரை இழந்துள்ளது. இந்த 3 விக்கெட்டையும் ஆஃப்கானிஸ்தான் அணியின் குல்பைதின் கைப்பற்றியுள்ளார். இலங்கை அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெடுகளை இழந்து 86 ரன்கள் சேர்த்துள்ளது. 

Afghanistan vs Sri Lanka LIVE: இரண்டாவது விக்கெட்டை இழந்த இலங்கை..!

இலங்கை அணி 15வது ஓவரில் தனது இரண்டாவது விக்கெட்டை இழந்துள்ளது. 15 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் சேர்த்துள்ளது. 

Afghanistan vs Sri Lanka LIVE: முதல் விக்கெட்டை கைப்பற்றுய ஆஃப்கானிஸ்தான்..!

ஆஃப்கானிஸ்தான் அணியின் குல்பைடன் நைப் வீசிய 11வது ஓவரின் 2வது பந்தில் கருணாரத்னே 35 பந்தில் 32 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

Afghanistan vs Sri Lanka LIVE: பொறுப்பான ஆட்டத்தில் இலங்கை..!

10 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 62 ரன்கள் சேர்த்துள்ளது. பொறுப்புடன் ஆடி வரும் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை வீழ்த்த ஆஃப்கானிஸ்தான் போராட்டம். 

Afghanistan vs Sri Lanka LIVE: 6 ஓவர்கள் முடிவில் இலங்கை..!

6 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் சேர்த்துள்ளது. 

Asia Cup 2023 LIVE: களமிறங்கிய இலங்கை..!

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. 

Asia Cup 2023 LIVE: டாஸ் வென்ற இலங்கை..!

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 

Background

ஆசியக்கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன.


ஆசியக்கோப்பை தொடர்:


ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள  ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த 30ம் தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதுவரை 4 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மட்டும் மழையால் கைவிடப்பட்டது.


நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி நேபாளத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால், குரூப் ‘ஏ’வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளதால், குரூப் ‘பி’-யில் எந்தெந்த அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனை முடிவு செய்ய இன்று நடைபெறும் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவுவைப் பொறுத்து முடிவு செய்யப்படும். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.