ஆசியாவில் உள்ள அணிகள் மட்டுமே பங்கேற்று ஆடும் மாபெரும் கிரிக்கெட் தொடராக ஆசிய கோப்பைத் தொடர் திகழ்கிறது. இந்த நிலையில், அடுத்தாண்டிற்கான ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானுமே ஆசிய கோப்பைத் தொடரில் பிரதான அணிகள் ஆகும்.


அரசு நிர்வாகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடாமல் உள்ளது. கடைசியாக, இந்திய அணி 2006ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா ஆடியது. இந்த நிலையில், அடுத்தாண்டு ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற உள்ளதால் இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.




இந்த நிலையில், பி.சி.சி.ஐ. செயலாளரும், ஆசிய கோப்பை கிரிக்கெட் கமிட்டி தலைவருமான ஜெய்ஷா கூறியிருப்பதாவது, “ ஆசிய கோப்பைத் தொடரை நடுநிலையான இடத்தில் நடத்த வேண்டும் என்பது முன்னெப்போதும் இல்லாதது அல்ல. நாங்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம். இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வதற்கான அனுமதியை அரசு தீர்மானிக்கிறது. எனவே, நாங்கள் அதைப் பற்றி கருத்து தெரிவிக்க மாட்டோம். 2023 ஆசிய கோப்பைத் தொடரை பொதுவான இடத்தில் நடத்த முடிவு செய்துள்ளோம்.”  


இவ்வாறு அவர் கூறினார்.


2009ம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடிய இலங்கை வீரர்கள் மீது மைதானத்திலே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடத்தப்பட்டது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிற நாட்டு கிரிக்கெட் அணிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். சமீபகாலமாகவே, வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகின்றனர்.





ஐ.சி.சி.யின் மாபெரும் கிரிக்கெட் தொடர்களை பாகிஸ்தான் நடத்த உள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை, 2025ம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபியை நடத்த உள்ளது. ஆனால், இந்த போட்டிகளில் இந்தியா தவிர்க்க முடியாத அணியாக இருப்பதால், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாடுமா..? அல்லது பாகிஸ்தானுக்கு பதிலாக வேறு நாட்டில் போட்டிகள் நடக்குமா..? என்று விரைவில் தெரியவரும்.


மேலும் படிக்க : T20 World Cup 2022: முதல் போட்டியிலே சறுக்கிய முன்னாள் சாம்பியன்கள்..! சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவார்களா..?


மேலும் படிக்க : IND vs AUS Warm Up Match: ஹர்திக் பாண்ட்யா அவுட்டானதை கொண்டாடினாரா சூர்யகுமார் யாதவ்..? வைரலாகும் வீடியோ..!