ஆசிய நாடுகளில் உள்ள கிரிக்கெட் அணிகளில் பலமிகுந்த அணி யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானிலும், இலங்கையிலும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஆசிய கோப்பையில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரர்கள யார்? யார்? என்பதை கீழே காணலாம்.
- ரோகித்சர்மா:
இந்திய கேப்டன் ரோகித்சர்மா இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். அவர் இதுவரை ஆசிய கோப்பைத் தொடரில் 22 போட்டிகளில் ஆடி 745 ரன்களை எடுத்துள்ளார். அவரது சராசரி 46.56 சதவீதம் ஆகும். நடப்பு தொடரில் அவர் பேட்டிங்கில் அசத்துவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
- சோயிப் மாலிக்:
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், சிறந்த ஆல் ரவுண்டருமான சோயிப் மாலிக் 4வது இடத்தில் உள்ளார். அவர் 2000ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ஆசிய கோப்பைக்கான தொடரில் அவர் ஆடியுள்ளார். அதில் 17 ஆட்டங்களில் ஆடியுள்ள அவர் 786 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரியாக 65.50 சதவீதம் வைத்துள்ளார். 2004ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக 143 ரன்கள் குவித்தது அவரது அதிகபட்சம் ஆகும்.
- சச்சின் டெண்டுல்கர்:
எந்தவொரு சாதனை பட்டியலிலும் சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சின் 3வது இடத்தில் உள்ளார். 1990ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை ஆசிய கோப்பைத் தொடரில் 23 போட்டிகளில் ஆடி 971 ரன்களை அவர் குவித்துள்ளார். சராசரியாக 51.10 சதவீதம் வைத்துள்ளார். ஆசிய கோப்பையில் 2 சதங்களும், 7 அரைசதங்களும் விளாசியுள்ளார்.
- சங்ககரா:
ஆசிய கோப்பையை இந்தியாவிற்கு அடுத்த படியாக அதிக முறை வென்ற அணி என்ற பெருமையை இலங்கை தன்வசம் வைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இலங்கை முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் வீரருமான சங்ககரா ஆவார். 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 5 ஆசிய கோப்பை தொடர்களில் ஆடியுள்ள சங்ககரா 24 போட்டிகளில் ஆடி 1075 ரன்கள் குவித்துள்ளார். அதில் 4 சதங்களும் 8 அரைசதங்களும் அடங்கும்.
1.ஜெயசூர்யா:
ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற மகத்தான சாதனையை யாரும் நெருங்க முடியாத வகையில் தன்வசம் வைத்திருப்பவர் இலங்கையின் அதிரடி பேட்ஸ்மேன் ஜெயசூர்யா. 1990ம் ஆண்டில் இருந்து 2018ம் ஆண்டு வரை 25 போட்டிகளில் ஆடியுள்ள ஜெயசூர்யா 1220 ரன்களை விளாசியுள்ளார். அதில் 6 சதங்களும், 3 அரைசதங்களும் அடங்கும்.
கடந்த சில ஆண்டுகளாக டி20, ஒருநாள் போட்டி என்று சுழற்சி முறையில் ஆசியகோப்பைத் தொடர் நெருங்குவதால் மற்ற வீரர்களால் அவர்களின் சாதனையை நெருங்க முடியவில்லை.
மேலும் படிக்க: BCCI Media Rights: பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம்.. கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்ற போட்டா போட்டி..! வெல்லப்போவது யார்?
மேலும் படிக்க: National Sports Day 2023: இந்தியாவில் எத்தனை வகையான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன? முழு பட்டியல் இங்கே!