ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது யுஏஇயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.இந்திய அணி அடுத்து நாளை நடைபெறும் போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. 


 


இந்நிலையில் இந்தப் போட்டிக்காக இந்திய அணியின் வீரர்கள் சிலர் பயிற்சியை மேற்கொண்டனர். இந்தச் சூழலில் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஜிம்மில் கடுமையாக பயிற்சி செய்துள்ளார். இது தொடர்பான படத்தை விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. 


 






பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ஒரளவு ஃபார்மிற்கு வந்தார். அவர் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஹாங்காங் அணிக்கு எதிரான நாளைய போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் கடப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இதன்காரணமாக அவருடைய படம் வேகமாக வைரலாகி வருகிறது. 




மேலும் படிக்க: ஆசிய கோப்பை: எதற்காக நான் முன்னதாகவே களமிறங்கினேன்... காரணத்தை உடைத்த ரவீந்திர ஜடேஜா..!




கோலி சாதனையை முறியடிப்பாரா ரோகித்:


 


 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 போட்டிகளில் இந்திய கேப்டனாக அதிக வெற்றி பெற்ற பட்டியலில் ரோகித் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அத்துடன் இவர் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது இந்திய அணியின் டி20 கேப்டனாக ரோகித் சர்மா தற்போது வரை 36 போட்டிகளில் செயல்பட்டுள்ளார். அவற்றில் ரோகித் சர்மா 30 போட்டிகளில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியையும் அடைந்துள்ளார். 


 






இதன்மூலம் இந்திய கேப்டனாக விராட் கோலி பெற்ற 30 வெற்றியை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். இந்திய கேப்டனாக விராட் கோலி 50 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு அவற்றில் 30 வெற்றியும், 16 தோல்வி, 2 டை மற்றும் 2 முடிவில்லை. இவருடைய சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். ஹாங்காங் அணிக்கு எதிரான அடுத்த போட்டியை ரோகித் சர்மா வெல்லும் பட்சத்தில் கோலியின் சாதனையை முறியடித்துவிடுவார். 




மேலும் படிக்க: பயம் காட்டிய பங்களாதேஷ்.. மாஸ் காட்டி சூப்பர் 4ல் நுழைந்த ஆஃப்கானிஸ்தான்..!