ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஆசிய கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் நாளை மறுநாள் மோத உள்ளன. இந்த நிலையில், சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இன்று துபாய் மைதானத்தில் மோதுகின்றன.






இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்டதால் இன்றைய போட்டியால் தொடரில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. இருப்பினும் இரு அணிகளுக்கும் இடையே நாளை மறுதினம் நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கு இந்த போட்டி ஒரு பயிற்சிப் போட்டியாக அமைந்துள்ளது.




இந்த தொடரில் இரு அணிகளுமே தங்களது முதல் போட்டியை தோல்வியுடன் தொடங்கினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக ஆடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். குறிப்பாக, இலங்கை அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் மோசமான தோல்வி அடைந்த பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர். பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றில் இந்தியா. ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி உற்சாகத்துடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. இலங்கை அணியும் கடந்த லீக் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய உற்சாகத்துடன் களமிறங்குகிறது.  


இந்த போட்டியால் எந்த தாக்கமும் இல்லை என்பதால் இரு அணிகளும் தங்களது அணியில் புதிய முயற்சிகளை சோதனை செய்து பார்க்க வாய்ப்புள்ளது. மேலும், இதுவரை அணியில் இடம்பெறாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கலாம்.




பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை மோசமான பார்மால் தவித்து வரும் கேப்டன் பாபர் அசாம் இன்றைய போட்டியில் பார்முக்கு திரும்புவாரா? என்று அந்த நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ரிஸ்வான் பேட்டிங்கில் பலமாக உள்ளார். பக்கர் ஜமான், முகமதுநிவாஸ், ஆசிப் அலி ஆகியோரும் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சில் நசீம்ஷா, ஹசன் அலி, முகமது நவாஸ் ஆகியோர் அசத்துகின்றனர்.


இலங்கையில் குசல் மெண்டிஸ், அசலங்கா, பனுகா ராஜபக்சே பேட்டிங்கில் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். கேப்டன் சனகா கடைசி வரிசையில் பேட்டிங்கில் கைகொடுப்பது அந்த அணிக்கு பக்க பலமாகும். பந்துவீச்சிலும் தீக்‌ஷனா,. மதுஷனகா ஆகியோர் இலங்கைக்கு பக்கபலமாக உள்ளனர். ஹசரங்கா சுழலில் அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம். இன்றைய போட்டியில் இரு அணிகளும் அதிரடியாக ஆட முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


மேலும் படிக்க : Asia Cup : ஆசிய கோப்பை 2022 : மைதானத்தில் சண்டை..! ஆசிப் அலி, பரீத் அகமதுவுக்கு அபராதம்..! என்ன ஆச்சு?


மேலும் படிக்க : Neeraj Chopra: மீண்டும் ஒரு வரலாற்று சாதனை.. டைமண்ட் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ்!