ஆசியகோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானும், இலங்கையும் வரும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. இந்த தொடரில் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் மோதிய ஆட்டம் ரசிகர்களால் மறக்க முடியாத போட்டியாக அமைந்தது. இறுதிவரை விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்ற கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.


போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆட்டத்தின் 19வது ஓவரை ஆப்கானிஸ்தானின் முக்கிய பந்துவீச்சாளர் பரீத் அகமது வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தில் பாகிஸ்தானின் முக்கிய வீரர் ஆசிப் அலி ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்த அவரது முன்பு பந்துவீசிய பரீத் அகமது அவரை அவுட்டாக்கிய மகிழ்ச்சியை கொண்டாடினார்.






ஆனால், அப்போது ஆத்திரமடைந்த ஆசிப் அலி அவரை தள்ளிவிட்டதுடன், அவரை பேட்டால் தாக்குவது போலவும் முயற்சி செய்தார். ஆசிப் அலியின் இந்த செயல் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மட்டுமின்றி மைதானத்தில் இருந்தவர்களையும் அதிர்ச்சியடைச் செய்தது. இந்த நிலையில், மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இருவருக்குமே ஐ.சி.சி. போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.






ஐ.சி.சி.யின் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக, அதாவது சர்வதேச போட்டியின்போது ஆபாசமான, புண்படுத்தும் அல்லது அவமதிக்கும் சைகையை பயன்படுத்துதல் கீழ் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலிக்கும், வீரருடன் மோதலில் ஈடுபட்டதற்காக ஆப்கானிஸ்தான் வீரர் பரீத் அகமதுவுக்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், மைதானத்தில் குழுமியிருந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் பாகிஸ்தான் ரசிகர்களை அடித்து விரட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அமைதியையும், அன்பையும் பரப்புங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க : Virat Kohli Century: 'நாம் மீள்வோம்.. நல்ல நிலைக்கு வருவோம்' - பாசிட்டிவ் வைபாக ரசிகர்களுக்கு நன்றி சொன்ன கோலி!


மேலும் படிக்க : Virat Kohli Century: நாயகன் மீண்டும் வரான்! 1021 நாட்களுக்கு பின் சதமடித்த கோலி! இந்திய ரசிகர்கள் செம ஹாப்பி.!