இன்று நடைபெறும் அனல் பறக்கும் மகளிர் ஆசிய கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று மதியம் 1 மணிக்கு துவங்கும் இந்த போட்டி, வங்கதேசத்தின் சில்ஹெட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.


மகளிர் ஆசியக்கோப்பை டி20 2022 


வங்கதேசத்தில் மகளிர் ஆசிய கோப்பை 2022 தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது இந்துஜா தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் விளையாடுகிறது. இந்த ஆசியக்கோப்பை போட்டிகளில் மொத்தம் 7 நாடுகளின் அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. ரவுண்ட் ராபின் முறையில் இந்தத் தொடரின் லீக் சுற்றுகள் நடைபெற்றன. இந்த லீக் சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து அணிகள் அரையிறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்தன. இந்தியா, தாய்லாந்து அணிக்கு எதிராகவும், இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாடிய நிலையில் இந்தியா போட்டியை எளிதாக வென்றது.



இந்தியா-தாய்லாந்து அரையிறுதி


முதல் அரையிறுதியில் இந்தியா - தாய்லாந்து அணிகள் விளையாடிய நிலையில் இந்திய அணி முதலில் பேட் செய்து 148 ரன்களை குவித்தது. 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நகர்ந்த தாய்லாந்து அணியால் 20 ஓவர்களில் வெறும் 74 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே இந்த அரையிறுதி போட்டியில் இந்தியா 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு எளிதில் தகுதி பெற்றது.


தொடர்புடைய செய்திகள்: Student Murder in Thomas Mount : ”இப்படித்தான் திட்டமிட்டு கொலை செய்தேன்” : மாணவி படுகொலை.. கொலையாளி சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்...


இலங்கை த்ரில் வெற்றி


இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மோதிய இலங்கை - பாகிஸ்தான் அணிகள், கடும் பலப்பரீட்சை நடத்தின. இலங்கை அணி முதலில் பேட் செய்து 122 ரன்கள் எடுத்த நிலையில், தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 121 ரன்கள் வரை வந்தது. கடைசியில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த வெற்றியை இலங்கை அணி வீராங்கனைகள், ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடி கொண்டாடினர்.



இந்தியா-இலங்கை பலப்பரீட்சை


இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்த இரு அணிகளும் வரும் இன்று மதியம் 1 மணிக்கு, சில்ஹெட் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன. இந்தத் தொடரில் இரு அணிகளும் முதல் சுற்றில் நேருக்கு நேர் விளையாடிய போது, அதில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.