ஆஸ்திரேலியாவில் நாளை மறுநாள் 8வது டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.


இந்த நிலையில், டி20 உலககோப்பை 7 முறை நடைபெற்றும் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த சில வீரர்களின் சாதனை மட்டும் முறியடிக்கபடாமல் வரலாறாக நீடித்து வருகிறது. அவற்றை கீழே விரிவாக காணலாம்.


அதிவேக அரைசதம் :


 2007ம் ஆண்டு முதன்முதலாக உலககோப்பைத் தொடரில் பங்கேற்ற இந்திய அணிக்காக இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசியதை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்த போட்டியில் இந்த சாதனை மட்டுமின்றி 12 பந்துகளிலே அரைசதம் விளாசி டி20 போட்டிகளிலே குறைந்த பந்துகளிலே அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையை வைத்துள்ளார். உலககோப்பையிலும் சரி, டி20 போட்டியிலும் இதுவே குறைந்த பந்துகளில் விளாசப்பட்ட அரைசதம் ஆகும்.



  • யுவராஜ்சிங் - 12 பந்துகளில் அரைசதம்

  • ஸ்டீபன் மைபர்க் – 17 பந்துகளில் அரைசதம்

  • கிளென் மேக்ஸ்வெல் – 18 பந்துகளில் அரைசதம்

  • கே.எல்.ராகுல் – 18 பந்துகளில் அரைசதம்

  • சோயிப் மாலிக் – 18 பந்துகளில் அரைசதம்


மேற்கண்ட வீரர்கள் டி20 உலககோப்பையில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய வீரர்கள் ஆவார்கள்.  


அதிக தொடருக்கு கேப்டன் :


அதிக டி20 உலககோப்பைத் தொடர்களுக்கு கேப்டனாக பொறுப்பு வகித்தவர் என்ற பெருமை மகேந்திர சிங் தோனி வசமே உள்ளது. அவரது சாதனை முறியடிக்கப்படுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.


எம்.எஸ்.தோனி                 – 6 முறை ( 2007 – 2016)


வில்லியம் போர்டர்பீல்ட் – 5 முறை ( 2009 – 2016)


பால் காலிங்வுட்                 - 3 முறை ( 2007 -2010)


கிரேம் ஸ்மித்                       - 3 முறை (2007 – 2010)


டேரன் சமி                             - 3 முறை (2012 – 2016)


 


ஒரு டி20 உலககோப்பையில் அதிக ரன்கள் :


ஒரு டி20 உலககோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை இந்திய முன்னாள் கேப்டன் விராட்கோலி வசம் உள்ளது. இந்திய அணிக்காக 2014ம் ஆண்டு களமிறங்கிய விராட்கோலி அந்த தொடரில் மட்டும் 319 ரன்களை விளாசி அசத்தினார்.



  • விராட்கோலி – 319 ரன்கள் ( 2014)

  • தில்ஷான் - 317 ரன்கள் ( 2009)

  • பாபர் அசாம் - 303 ரன்கள் ( 2021)

  • ஜெயவர்தனே – 302 ரன்கள் ( 2010)

  • தமீம் இக்பால் – 295 ரன்கள் ( 2016)


அதிக முறை தொடர் நாயகன்:


உலககோப்பை டி20 தொடரிலே அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர் என்ற பெருமை விராட்கோலி வசம் உள்ளது.


அதிக பேட்டிங் ஆவரேஜ் :


டி20 உலககோப்பைத் தொடர் போட்டிகளில் பேட்டிங்கில் அதிக சராசரி வைத்துள்ள வீரர் என்ற சாதனையை விராட்கோலி தன்வசம் வைத்துள்ளார்.



  • விராட்கோலி – 76.81 சதவீதம்

  • மைக்கேல் ஹஸ்சி - 54.62 சதவீதம்

  • கெவின் பீட்டர்சன் - 44.61 சதவீதம்


அதிக முறை அரைசதம் :


டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை அரைசதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை விராட்கோலி தன்வசம் வைத்துள்ளார்.



  • விராட்கோலி – 10 அரைசதங்கள்

  • கிறிஸ் கெயில் – 9 அரைசதங்கள்

  • ரோகித் சர்மா – 8 அரைசதங்கள்


அனைத்து டி20 தொடரிலும் ஆடிய வீரர்:


இதுவரை 2007ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்து டி20 தொடர்களிலும் ஆடிய வீரர் என்ற சாதனை பட்டியலில் ரோகித்சர்மா உள்ளார்.



  • ரோகித்சர்மா

  • ட்வெயின் ப்ராவோ

  • முஸ்பிகுர் ரஹ்மான்

  • ஷகிப் அல்ஹசன்

  • மஹ்மதுல்லா


இவர்களில் ரோகித்சர்மா மற்றும் ஷகில் அல் ஹசன் மட்டுமே நடப்பு உலகத் தொடரில் பங்கேற்கின்றனர்.


அதிக முறை மெயிடன் ஓவர்கள் :


டி20 உலககோப்பைத் தொடர்களில் அதிக முறை மெய்டன் ஓவர்கள் வீசிய பெருமையை இந்திய வீரர் ஹர்பஜன்சிங் தன்வசம் வைத்துள்ளார்.



  • ஹர்பஜன்சிங் – 4 ஓவர்கள்

  • பெர்னாண்டோ – 3 ஓவர்கள்

  • ரங்கனா ஹெராத் – 3 ஓவர்கள்

  • குலசேகரா – 3 ஓவர்கள்

  • அஜந்தா மெண்டிஸ் – 3 ஓவர்கள்


மேற்கண்ட இந்திய வீரர்களின் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.