தோனியிடம் பிடித்த விஷயம்:


சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திய கேப்டன்களில் முக்கியமானவர்கள் தோனி, ரோஹித் மற்றும் விராட் கோலி. இதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று இருந்தாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். அதேபோல், விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளிலும், ரோஹித் ஷர்மா டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.


இச்சூழலில் தான் இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்திய மூன்று கேப்டன்கள் குறித்து அஸ்வின் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,"வீரர்களின் பார்வையில் தோனியிடம் எனக்கு ஒரு விஷயம் மிகவும் பிடிக்கும். அவர் வீரர்களுக்கு நீண்டகால வாய்ப்பு கொடுத்தார். எடுத்துக்காட்டாக ரவீந்திர ஜடேஜா அல்லது சுரேஷ் ரெய்னாவை பாருங்கள்.


ரவீந்திர ஜடேஜாவை ஃபினிஷராக வளர்த்த தோனி கடைசி வரை அவரிடம் அதே வேலையை கொடுத்தார். அது இந்திய அணிக்கு பயன் அளிப்பதாக அமைந்தது. ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டராக முன்னேற உதவியது. எனவே தோனி ஒருவரை கண்டறிந்து விட்டால் அவர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுப்பார்.


கோலியிடம் பிடித்த விஷயம்:


அதுவே அவரிடம் பிடித்த விஷயம். அவர் கூலாகவும் இருப்பார். விராட் கோலி உத்வேகமாகவும் தமக்கு தாமே சாதித்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் இருப்பார். அதே போல மற்ற வீரர்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்"என்று கூறியுள்ளார்.


தொடர்ந்து பேசிய அஸ்வின்,"ரோஹித் சர்மா அணியின் சூழ்நிலையை மிருதுவாக வைத்திருப்பார். ஒரு பெரிய தொடர் அல்லது போட்டி வந்தால் அதற்காக பயிற்சியாளர் மற்றும் அனலைஸ்ட் குழுவுடன் உட்கார்ந்து எதிரணியின் பலவீனம் என்ன, என்ன திட்டம் வகுக்கலாம் என்பதில் ரோஹித் அதிகமாக கவனம் செலுத்துவார். அவரும் வீரர்களுக்கு 100% ஆதரவை கொடுப்பார்" என்று கூறினார்.


மேலும் படிக்க: Paris Paralympics 2024: பாரீஸ் பாராலிம்பிக்.. இந்தியா விளையாடும் போட்டிகள் என்ன? பதக்க வாய்ப்பு உள்ளதா?


 


மேலும் படிக்க: Rishabh Pant: டிராவிட்டுக்கும் கம்பீருக்கும் உள்ள வித்தியாசம்.. உண்மையை உடைத்த ரிஷப் பண்ட்